சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீ விபத்தில் 3 கடை சாம்பல்

Added : ஆக 09, 2011
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர், புது பஸ் ஸ்டாண்டில் நகராட்சி வணிக வளாக கடைகள் உள்ளன. அதில், டவுன் பஸ்கள் நிறுத்தும் இடம் அருகே வெற்றிவேல் என்பவரது ஹோட்டல் உள்ளது. நேற்று மாலை 6.30 மணியளவில், மிக்ஸர் உள்ளிட்ட பொருட்களை தயார் செய்து கொண்டிருந்தபோது, திடீரென எண்ணெய் தீப்பற்றி எரிந்தது. அதையடுத்து கடை முழுவதும் தீ பரவியது.தொடர்ந்து, அருகில் உள்ள வாட்ச் கடை, கூல்டிரிங்ஸ் கடைகளுக்கும் தீ பரவியது. தகவலறிந்த ஆத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்தில், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பலானது.ஆத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X