பிரிட்டீஸ் கப்பற்பபடையில் முதன்முதலாக பெண் கமாண்டர் நியமனம்| Woman to command a Royal Navy ship in its 500-yr history | Dinamalar

பிரிட்டீஸ் கப்பற்பபடையில் முதன்முதலாக பெண் கமாண்டர் நியமனம்

Added : ஆக 09, 2011
Share
லண்டன்: இங்கிலாந்து ராணுவத்தின் 500 ஆண்டுகால கப்பற்படை வரலாற்றில் முதன்மு‌தலாக பெண் அதிகாரி ஒருவர் லெப்டினட் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் வலிமைமிக்க படைப்பிரிவுகளில் கப்பல்படைதான் சிறந்தது. கப்பற்படை வாயிலாகவே பிரிட்டிஸார் தங்களது காலனி ஆதிக்கத்தினை உலகம் முழுவதும் நிறுவினர். உலகிலேயே மிகவும் பழமையானதும் கூட, சுமார் 500 ஆண்டுகள் பழமையானது
Woman to command a Royal Navy ship in its 500-yr history ,பிரிட்டீஸ் கப்பற்பபடையில் முதன்முதலாக பெண்  கமாண்டர் நியமனம்

லண்டன்: இங்கிலாந்து ராணுவத்தின் 500 ஆண்டுகால கப்பற்படை வரலாற்றில் முதன்மு‌தலாக பெண் அதிகாரி ஒருவர் லெப்டினட் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் வலிமைமிக்க படைப்பிரிவுகளில் கப்பல்படைதான் சிறந்தது. கப்பற்படை வாயிலாகவே பிரிட்டிஸார் தங்களது காலனி ஆதிக்கத்தினை உலகம் முழுவதும் நிறுவினர். உலகிலேயே மிகவும் பழமையானதும் கூட, சுமார் 500 ஆண்டுகள் பழமையானது இங்கிலாந்து கப்பற்படை. இப்படையின் எச்.எம்.எஸ். போர்லாண்ட் பிரிவில் 185 ஆண் வீரர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு தலைமை ஏற்று வழிநடத்தும் லெப்டின்ட் கமாண்டராக, சாராவெஸ்ட், 39 என்ற பெண் வீராங்கனை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் கப்பல்படையில் சிறிய ரக போர்க்கப்பல்கள், மீன்பிடிகப்பல்களில் தான் பெண்கள் இருந்து வந்தனர். ஆனால் லெப்டினட் கமாண்டர் பதவிக்கு இதுவரை எந்த பெண்களும் வரவில்லை. ஆகையால் ஆண்களுக்கு நிகராக கடும் உழைப்பிற்கு பின்னர் தான் சாரா வெஸ்ட் தேர்வானார். இங்கிலாந்தின் லிங்கோ‌னோஷெயர் மாகாணத்தைச் சேர்ந்த சாராவெஸ்ட், இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 1995-ம் ஆண்டு ஹெர்போர்ட்ஷெயர் பல்கலை.யில் கணிதம் படித்தார். இது குறித்து கப்பற்படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், எச்.எம்.எஸ்.போர்லாண்ட் பிரிவில் , சாரா வெஸ்ட் அடுத்த ஆண்டு (2012) ஏப்ரல் மாதம் முதல் லெப்டினட் காமாண்டராக பதவியேற்பார். அதுவரை அவருக்கு உரிய பயி்ற்சிகள் அளிக்கப்படும் என்றார். லெப்டினட் கமாண்டராக பொறுப்பேற்றால். போரின் போது சுமார் 5 ஆயிரம் டன் எடையும், 133 மீட்டர் நீளம் ‌ கொண்ட போர் கப்பலை இயக்கி கடலிலிருந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்துவது, நீர்முழ்கி கப்பல்களை இயக்க உத்தரவிடுவது போன்ற பயிற்சிகளை மேற்‌கொள்வார்.இவருக்கு 4.05 இன்ஞ்ச் கொண்ட துப்பாக்கி தற்காப்பிற்காக கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X