அரசியலுக்கு வழிகாட்டிய அமேதி மக்கள்: பேரணியில் ராகுல் உருக்கம்

Updated : டிச 18, 2021 | Added : டிச 18, 2021 | கருத்துகள் (9)
Advertisement
அமேதி: நான் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட அமேதி தொகுதி மக்கள் தான் அரசியலுக்கு வழிகாட்டினார்கள் என ராகுல் தெரிவித்துள்ளார்.உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமேதியில் மத்திய அரசை கண்டித்து, விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக இன்று காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பங்கேற்ற ராகுல்

அமேதி: நான் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட அமேதி தொகுதி மக்கள் தான் அரசியலுக்கு வழிகாட்டினார்கள் என ராகுல் தெரிவித்துள்ளார்.




latest tamil news




உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமேதியில் மத்திய அரசை கண்டித்து, விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக இன்று காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பங்கேற்ற ராகுல் இவ்வாறு பேசினார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் உத்தரபிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளருமான பிரியங்கா உள்ளிட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

ராகுல் மேலும் பேசியதாவது: மத்திய அரசு மீது மக்களுக்கு கோபம் மட்டுமே உள்ளது. நான் 2004ல் அரசியலுக்கு வந்தேன். அமேதி தொகுதியில் தான் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டேன். அமேதி மக்கள் அரசியல் பற்றி எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளனர். நீங்கள் தான் எனக்கு அரசியலுக்கான வழியை காட்டினீர்கள். 'என் இதயத்தில் அமேதி மக்களுக்கு முன்பு போலவே இடமுண்டு. நாங்கள் இன்னும் அநீதிக்கு எதிராக ஒன்றுபட்டு உள்ளோம். உங்கள் அனைவருக்கும் நன்றி இவ்வாறு ராகுல் பேசினார்.


latest tamil news



காங்கிரசின் கோட்டையாக விளங்கிய அமேதி தொகுதியில், கடந்த தேர்தலில் ராகுல் , பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். அதன்பின்னர் 2வது முறையாக ராகுல் அமேதிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-டிச-202108:51:39 IST Report Abuse
வீரா இந்திரா மற்றும் ராஜிவ் காந்தி படுகொலைகள் சோனியாவின் இந்தியாவுக்கு சம்பந்தமில்லாத அந்நியத்தன்மை போன்றவை ராகுலை ஒரு நிரந்தர பப்புவாகவே மாற்றிவிட்டது. தவறான பல முடிவுகளை அரசியலில் எடுத்தாலும் நேரு மற்றும் இந்திரா காந்தியிடம் இருந்த புத்திசாலித்தனமோ பேச்சாற்றல் வசீகரமோ கிஞ்சித்தும் இல்லாதவர்கள் இந்த பப்பு பப்பி. இனி இந்தியாவில் எந்த ஒரு பெற்றோரும் குழந்தை பப்பு என்று செல்லபெயரிட்டு கொஞ்ச தயங்கும் அளவுக்கு ராகுல் மக்கு ஆகிவிட்டார்.
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
19-டிச-202107:31:12 IST Report Abuse
Loganathan Kuttuva அமேதி தொகுதிக்கு இவர் எந்த பணியும் செய்யவில்லை .
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
19-டிச-202104:06:31 IST Report Abuse
S. Bharani அமேதி மக்கள் ஏன் உன்னை புறக்கணித்தார்கள் என கேட்டு தெரிந்து கொண்டு பிறகு விளக்கம் தரவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X