லண்டன்: இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் 2012-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளை, சர்ச்சைக்குரிய டேவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்துள்ளதற்கு இந்தியா கண்டனம்.தெரிவித்துள்ளது. இந்த கெமிக்கல் நிறுவனம் தான், இந்தியாவில் மறக்கமுடியாத பேரழிவான போபால் விஷவாயு சம்பவத்திற்கு காரணம் என்பதால். இந்தியா, இங்கிலாந்து மீது ஆத்திரமடைந்துள்ளது. இதனால் ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க போவதாக இந்திய விளையாட்டு வீரர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகி்ன்றன.இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றது. இப்போட்டிகள் முழுவதற்கும் 11.4 மி்ல்லியன் டாலர் செலவில் டேவ்கெமிக்கல்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் தான் இந்தியாவில் கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த கோர விபத்தான போபால் விஷயவாயு தாக்குதல் நடப்பதற்கு காரணமாக இருந்தது. 20 ஆயிரத்திற்கும் அதிகமானோரை பலி வாங்கிய இந்த நிறுவனம் , ஒலிம்பிக் போட்டியை நடத்த ஸ்பான்சர் செய்ய இங்கிலாந்து அனுமதிக்ககூடாது என இந்தியா கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவில் பல்வேறு அமைப்புகளும் லண்டன் ஒலிம்பிக் சங்கத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து போபால் சம்பவத்தால் பாதிப்பிற்குள்ளானவர்களில் ஒருவரான சத்யநாத்சாரங்கி கூறியதாவது: பல ஆயிரம்பேர் பலியானதற்கு காரணமான டேவ் கெமிக்கல்ஸ் நிறுவனம், தனது பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது. இந்த கொடுஞ்சலுக்கு காரணமான நிறுவனத்திற்கு எதிராக இந்தியா, லண்டன் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்து பேரணி நடத்துள்ளோம் என்றார்.மேலும் போபால் நகரைச் சேர்ந்த மூத்த விளையாட்டு வீரர்கள் லண்டன் ஒலிம்பிக் போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இது குறித்து இங்கிலாந்து தரப்பில் கூறுகையில், போபால் விஷவாயு சம்பவத்திற்கு டேவ் கெமிக்கல்ஸ் காரணம் அல்ல என்றும், யுனியன் கார்பைடு தான் என்றும், இந்த சம்பவத்தினால் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும்,பாதிக்கப்பட்டவர்களுக்கும் இழப்பீடாக 470 மில்லியன் டாலர் ( 287.8740 பவுண்ட்) வழங்கியுள்ளதாக பி.பி.சி. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE