Three dengue deaths in Orissa | ஒடிசா டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பலி| Dinamalar

ஒடிசா டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பலி

Added : ஆக 09, 2011

புவனேஸ்வர்: ஒடிசாவில் டெங்கு காய்ச்சலுக்கு மூன்று பேர் பலியாகியுள்ளனர். மேலும் எட்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஒடிசா மாநில சுகாதராத்துறை இணை இயக்குனர் பைகாஸ்பட்நாயக் கூறுகையில், ஒடிசாவில் உள்ள ஏங்கூல் மாவட்டத்தில் கடந்த ஞாயிறன்று டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்குள்ளான ஒரு பெண் ஒருவர் பலியானார். மேலும் இருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவந்தனர். இவர்கள் இருவரும் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் இப்பகுதியில் எட்டு பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றார். கடந்த 2 வாரங்களில் 37 பேருக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். உடனடியாக இப்பகுதிக்கு 5 டாக்டர்கள் ,20 சுகாதராத்துறை ஊழியர்கள் கொண்ட குழுவினர் விரைந்துள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X