''எந்த கட்டடத்தையும் தரமா கட்டி, முறையா பராமரிச்சா இந்த மாதிரி சோகங்களை தடுக்கலாம் வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''சென்னை, அண்ணா சாலையில மின் வாரியத்துக்கு 10 மாடி கட்டடம் இருக்கு... இதுக்கு இணையா, 20 கோடி ரூபாய் மதிப்புல, அதே உயரத்துக்கு புதுசா கட்டடம் கட்டுதாவ வே...
''போன 2017ல துவங்குன வேலைகளை 2019லயே முடிச்சிருக்கணும்... ஆனா, இன்னும் கட்டிட்டே இருக்காவ...
''இதுக்கு பக்கத்துலயே மின் தொடரமைப்பு கழகத்துக்கு, 56 கோடி ரூபாய்ல, ஆறு மாடியில புதுசா கட்டடம் கட்டி, சமீபத்துல தான் திறந்தாவ வே...
''ஆனா, இப்ப பெய்த மழையில, கட்டடத்துல பல இடங்கள்ல தண்ணீர் தேங்கிட்டு... கட்டுமானத்துல தரமில்லைன்னு ஊழியர்கள் சொல்லுதாவ... அதனால, 10 மாடி கட்டடத்தையும் தரமா கட்டுதாவளான்னு அதிகாரிகள் முறையா ஆய்வு செய்யணும் வே...'' என்றார் அண்ணாச்சி.
''பிடிச்ச சரக்கை திருப்பி தந்துட்டு போயிட்டாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''என்ன சரக்கு ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''சென்னையில நிறைய இடங்கள்ல போலி மது விற்பனை கொடி கட்டி பறக்குது... அண்ணாநகர் பகுதியில இருக்கிற அன்னை சத்யா நகர்ல போலி மது விற்கிறதா, போலீசாருக்கு சமீபத்துல தகவல் கிடைச்சது பா...
''அங்கே நடத்துன சோதனையில, அ.தி.மு.க., பிரமுகரின் வாரிசு ஒருத்தர் போலி மது விற்கிறதைகண்டுபிடிச்சாங்க... அவர் மேல நடவடிக்கை எடுக்க தயாரானப்ப, அவருக்கு ஆதரவா ஆளுங்கட்சி புள்ளிகள் சிலரே சிபாரிசுக்கு வந்திருக்காங்க பா...
''அதோட, பிடிபட்ட நபர், போலீசாரை சிறப்பா, 'கவனிக்க' அவரை கைது செய்யாம, பிடிச்ச மது பாட்டில்களையும் திருப்பி குடுத்துட்டு, புகார் வராத மாதிரி கமுக்கமா விற்பனை செய்யுங்கன்னு அறிவுரையும் சொல்லிட்டு போயிட்டாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''தொகுதியில தி.மு.க., கரைஞ்சு காணாம போயிடும்னு பயப்படறா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் குப்பண்ணா.
''எந்த தொகுதியிலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''சென்னையை ஒட்டியிருக்கற ஸ்ரீபெரும்புதுார், ராஜிவ் இறந்த ஊருங்கறதால, ஒவ்வொரு சட்டசபை தேர்தல்லயும் காங்கிரசார் இந்த தொகுதியை கேட்டு வாங்கிடறா... இப்பவும், காங்கிரஸ் சட்டசபை தலைவர் செல்வபெருந்தகை தான் இங்க எம்.எல்.ஏ.,வா இருக்கார் ஓய்...
''தொகுதியில நிறைய தனியார் தொழிற்சாலைகள் இருக்கு... இதுலயும், அரசு டெண்டர்கள், அதிகாரிகள் இடமாறுதல்னு எல்லாத்துலயும் இவரது தலையீடு இருக்கு ஓய்...
''சமீபத்துல சில ஊராட்சி எழுத்தர்களை வேற ஊராட்சிகளுக்கு பி.டி.ஓ., இடம் மாற்றியும், எம்.எல்.ஏ., தலையீட்டால, மாறுதலை நிறுத்தி வச்சிருக்கா... 'தி.மு.க.,வினர் ஏதாவது கோரிக்கை வச்சா கூட, என் கவனத்துக்கு தெரியாம எதையும் செய்யப்டாது'னு அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டிருக்கார் ஓய்...
''ஏற்கனவே, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய குழு தலைவர் பதவியையே தி.மு.க.,வினர், சுயேச்சை வேட்பாளரிடம் போராடி தான் ஜெயிச்சிருக்கா... 'இதே நிலைமை நீடிச்சா, ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில தி.மு.க., சுத்தமா காணாம போயிடும்'னு புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.அரட்டை முடிய அனைவரும் கிளம்பினர்.
அடாவடி வசூல் வேட்டையில் உதயநிதி ரசிகர்கள்!
''சரி தான்... என்ன விஷயமுன்னு முதல்ல சொல்லும் வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், கிடங்குல இருந்து கணினியில் பதிவு செய்து தான், சரக்கை கடைகளுக்கு அனுப்புது பா...''ஆனால், கடைக்கு தேவைப்படுற சரக்கு எது, எதுன்னு மேற்பார்வையாளர் தான், அதிகாரிகளிடம் சொல்லுவார்... இதனால குறிப்பிட்ட சரக்கை, 'குடி'மகன்களிடம் தள்ளி விடுறதும், சில சரக்கை விற்காம இருப்பதும், டாஸ்மாக் கடையில நடக்கும் பா...
''இதை தடுக்குறதுக்காக கிடங்குல இருந்து, 'குடி'மகனிடம் விற்குறது வரை எல்லாத்தையும் கணினிமயமாக்க, 2020ல், டாஸ்மாக் முடிவு செஞ்சது பா...
''இப்படி செய்றதுக்காக ஒவ்வொரு கடைக்கும், 'பார் கோடு' கருவியை கொடுத்து, அதில் 'ஸ்கேன்' செஞ்சு தான் சரக்கை விற்கணுமுன்னு உத்தரவு போடணும் பா...
''இதனால கடையில் உள்ள இருப்பு, விற்பனை விபரங்களை அதிகாரிகள் இணையதளம் வாயிலா எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் தெரிஞ்சுக்கலாம் பா...
''டாஸ்மாக் நிர்வாகம் முழுசா கணினிமயமானா, மோசடி பண்ண முடியாதுன்னு நினைச்சு, அத்திட்டத்தை அதிகாரிகள் தாமதம் செய்றாங்க பா...'' என விளக்கினார், அன்வர்பாய்.
''கட்டுமான அனுமதி பணிக்காக, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., இருக்காரு ஓய்...'' என்றபடியே அடுத்த தகவலை சொல்ல ஆரம்பித்தார், குப்பண்ணா...
''இந்த அலுவலகத்துல சில ஆண்டுகளுக்கு முன், துணை திட்ட அதிகாரி ஒருத்தர் மேல, பாலியல் புகார் வந்தது ஓய்...''அலுவலக அளவுல இதை விசாரிக்க குழு அமைச்சு நடவடிக்கை எடுத்தா... மனித உரிமைகள் ஆணையம் வரை இந்த வழக்கு போனது... இப்போ, மேலும் ஒரு அதிகாரி மேல பாலியல் புகார் வந்துருக்கு ஓய்...
''சி.எம்.டி.ஏ., சட்டப்பிரிவு பணிகளை, உதவி பொறியாளர் ஒருத்தர் கவனிக்கறார்... இவர் கட்டுப்பாட்டுல இரண்டு பெண் வழக்கறிஞர்கள், தற்காலிக பணியாளர்களா இருந்தாங்க ஓய்...
''உதவி பொறியாளர், பாலியல் தொல்லை கொடுப்பதாக, ஒரு பெண் வழக்கறிஞர் புகார் கொடுத்து இருக்காங்க... ஆனா நடவடிக்கை எடுக்க வேண்டிய, ''மெம்பர் செகரட்டரி' மவுனமா இருக்காராம்... இதனால புகாரை, முதல்வர் கவனத்துக்கு எடுத்துண்டு போக போறாங்க ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''என்னடா, இன்னும் ஆரம்பிக்கலையேன்னு நினைச்சேனுங்க...'' என்றபடியே கடைசி தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.
''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''திருப்பூருல, 'உதயநிதி ரசிகர் நற்பணி மன்றம்' சார்புல இன்னைக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்துறாங்க... இதுல, இரண்டு அமைச்சர் உட்பட உள்ளூர் எம்.எல்.ஏ.,க்கள் கலந்துக்க இருப்பதா விளம்பரம் செஞ்சாங்க...
''அப்புறம் என்ன, உதயநிதி ரசிகர் மன்றத்தினர், திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில இருக்கிற கடைகள்ல, தலா, 5,000 ரூபாய் தரணுமுன்னு மிரட்டி வசூல் பண்ணியிருக்காங்க...
''வியாபாரிகள் வயித்தெரிச்சல்ல, உதயநிதி பெயரில் நிகழ்ச்சி நடக்குதுங்க... இதுபோல, இனி அடிக்கடி நடக்குமுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி. நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE