சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'கூட இருந்தே குழி...'

Updated : டிச 19, 2021 | Added : டிச 19, 2021 | கருத்துகள் (1)
Advertisement
தஞ்சாவூரில், பா.ஜ.,வைச் சேர்ந்த, 'மாஜி' மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வீட்டில், ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனை மூலம் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.தவறு செய்தால், யாராக இருந்தாலும், முழுமையாக
பக்கவாத்தியம்

தஞ்சாவூரில், பா.ஜ.,வைச் சேர்ந்த, 'மாஜி' மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வீட்டில், ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனை மூலம் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.
தவறு செய்தால், யாராக இருந்தாலும், முழுமையாக விசாரித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்...' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'முன்னாள் அமைச்சர்கள் வீட்டுல, 'ரெய்டு' மட்டும் நடத்துறீங்க... அவங்களை புடிச்சு ஜெயில்ல போடுங்கன்னு சொல்லுற மாதிரி இருக்கே... அ.தி.மு.க.,வுடன் கூட இருந்தே குழி பறிக்குறாரா?' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.


'போலீசை மட்டுமா வழி நடத்துறாங்க?'


சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சமீபத்தில் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'டி.ஜி.பி., கட்டுப்பாட்டில், காவல் துறை இல்லை. தி.மு.க., மாவட்ட செயலர்கள் தான், தமிழக காவல் துறையை வழி நடத்துகின்றனர். அரசு உயரதிகாரிகளை, கோபாலபுரத்தின் சேவகர்களாக, அடிமைகளாக மாற்றி வைத்திருக்கின்றனர்...' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'தமிழகத்தை பொறுத்தவரை, மாவட்ட செயலர்கள் தான் கலெக்டர் போல செயல்படுறாங்க... அரசு நிர்வாகத்தில், ஆளுங்கட்சியினரின் கண் அசைவு இல்லாமல் எதுவும் நடக்காதே... முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான இவருக்கு, இது நன்றாக தெரிந்திருக்குமே...' எனக் கூற, சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.


'தமிழர்களின் தேசப்பற்று!'


நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, மீட்பு பணியில் ஈடுபட்டோருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, நஞ்சப்பா சத்திரம் அருகே காட்டேரியில் சமீபத்தில் நடந்தது.
தென் பிராந்திய ராணுவ தளபதி லெப்.,ஜெனரல் அருண், 'உயிர் காக்கும் உதவியாக, ராணுவம் சார்பில் மருத்துவ வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். அங்கிருந்த மக்கள், நெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.இதைக் கண்ட இளம் நிருபர் ஒருவர், 'தமிழக மக்களிடம் தேசப்பற்று நிறையவே இருக்கிறது... திராவிட கட்சிகள் அதை மழுங்கடிக்க முயற்சிக்கின்றன... நம் நாட்டிற்கு எதிராக யார் செயல்பட்டாலும், மக்கள் ஒற்றுமையுடன் அவர்களை எதிர்ப்பர்...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
19-டிச-202119:30:22 IST Report Abuse
D.Ambujavalli ராணுவத்தினர் என்பதால் இல்லை, எந்தக்கட்சி என்ற எண்ணமே இல்லை, சக மனிதர்கள் எவரையாவது காப்பாற்ற முடியுமா என்ற தவிப்பு மட்டுமே அவர்களை இலக்கியது பின்னால் பாராட்டும் சலுகைகளும் கிடைக்குமென்று யாரும் நினைக்கக்கூட இல்லை அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X