சண்டிகர்-மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற பாரதீய கிசான் யூனியன் தலைவர் குர்நாம் சிங் சதுனி புதிய அரசியல் கட்சி துவக்கியுள்ளார்.

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும் சதுனி அறிவித்து உள்ளார்.மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேல் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு சமீபத்தில் 'வாபஸ் 'பெற்றது. விவசாயிகளின் இந்தப் போராட்டத்தை பாரதீய கிசான் யூனியன் என்ற அமைப்பு தான் ஒருங்கிணைத்து நடத்தியது.
இந்நிலையில் இந்த அமைப்பின் தலைவர் குர்நாம் சிங் சதுனி அரசியல் கட்சி துவக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இது குறித்து குர்நாம் சதுனி நேற்று கூறியதாவது:விவசாயிகளின் நலனுக்காக 'சம்யுக்தா சங்ஹர்ஷ்' என்ற அரசியல் கட்சி துவக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் அடுத்தஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கட்சி தனித்துப் போட்டியிடும். நான் போட்டியிட மாட்டேன். பஞ்சாப் தேர்தலில் நாங்கள் பெறும் வெற்றி ஒரு முன்னுதாரனமாக இருக்கும். வரும் 2024ல் நடக்கும் லோக்சபா தேர்தலில் நாடு முழுதும் உள்ள விவசாயிகளிடம் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE