மணிலா-தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளியில் 31 பேர் உயிரிழந்தனர்; பல கட்டடங்கள் தரைமட்டமாகின.

தென் சீனக் கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலுக்கு இடையே உள்ள தீவுக் கூட்டமான பிலிப்பைன்ஸ், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 20 புயல் அல்லது சூறாவளியை சந்திக்கிறது. அந்த வகையில் பிலிப்பைன்சின் மத்திய மற்றும் தென் பிராந்தியங்களில், 'ராய்' என பெயரிடப்பட்ட கடும் சூறாவளி நேற்று முன்தினம் நள்ளிரவில் தாக்கியது.

மணிக்கு 195 - 270 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதில் இந்தப் பிராந்தியம் கடும் பாதிப்பை சந்தித்தது.இந்த பகுதிகளைச் சேர்ந்த மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஏற்கனவே பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருப்பினும் மரங்கள் விழுந்தது உள்ளிட்ட காரணங்களால் 31 பேர் உயிரிழந்தனர். பல கட்டடங்கள் தரைமட்டமாயின. சில பகுதிகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE