புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.,க்கள் 12 பேர் நடப்பு குளிர்கால கூட்டத் தொடர் முழுதும் பங்கேற்க முடியாதபடி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

இந்த முடிவை எதிர்த்து தினமும் எதிர்க்கட்சியினர் சபையில் கூச்சலிட்டு, பார்லிமென்ட் நடவடிக்கைகளை முடக்கி வருகின்றனர். தினமும் பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்; உண்ணாவிரதமும் இருந்து வருகின்றனர். 'இது வெறும் நாடகம்' என, கடுமையாக விமர்சிக்கின்றனர் பா.ஜ.,வினர். இந்த உண்ணாவிரத எம்.பி.,க்களுக்கு தி.மு.க., - எம்.பி., ஒருவர் வீட்டிலிருந்து தினமும் இட்லி, வடை, சாம்பார் தயாரிக்கப்பட்டு பார்லிமென்டிற்கு எடுத்து வரப்படுகிறது.

காந்தி சிலைக்கு பின்புறம் சென்று இவர்கள் இட்லி, வடை சாப்பிடுகின்றனர். இதைப் பார்த்து ஒரு பஞ்சாப் எம்.பி., சமோசா சப்ளை செய்தார். ஆந்திராவைச் சேர்ந்த எம்.பி., தோசை வினியோகம் செய்கிறார். இப்படி காந்தி சிலைக்கு பின்னால் ஒரு விருந்தே நடக்கிறது. இது போராட்டமா அல்லது சுற்றுலா தலமா என, கிண்டலாக கேட்கின்றனர், பா.ஜ., தலைவர்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE