பீட்: மஹாராஷ்டிராவின் ஒரு கிராமத்தில் தங்கள் குட்டியை கொன்றதற்கு பழிதீர்க்கும் வகையில், 250க்கும் மேலான நாய்களை குரங்குகள் கொலை செய்துள்ள தாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
மஹாராஷ்டிராவின் பீட் மாவட்டம் மஜல்கான் கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அளிப்பதாக உள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:இங்கு ஏராளமான குரங்குகள் உள்ளன. ஒரு குரங்கு குட்டியை கடந்த மாதம் சில நாய்கள் சேர்ந்து கொன்றன. அதற்கு பழிவாங்க குரங்குகள் இதுவரை 250க்கும் மேலான நாய்களை கொன்றுள்னன.கட்டடம் மற்றும் மரங்களின் உச்சிக்கு நாய்களை இழுத்துச்சென்று, பின் அங்கிருந்து கீழே தள்ளி குரங்குகள் கொல்கின்றன.அடுத்ததாக பள்ளி செல்லும் குழந்தைகள் மீதும் குரங்குகள் தாக்குதலை துவங்கி உள்ளன.

அவற்றிடம் இருந்து எங்களை காப்பாற்றும்படி வனத்துறையினரிடம் கேட்டோம்.நாள் முழுதும் போராடியும் ஒரு குரங்கும் அவர்களிடம் சிக்கவில்லை. இதனால் அதிக அச்சத்தில் உள்ளோம். பிரச்னைக்கு தீர்வு காண, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement