5 வயது சிறுவன் பட்டினியால் இறந்தானா?: தள்ளுவண்டியில் கிடந்த சடலம்

Updated : டிச 19, 2021 | Added : டிச 19, 2021 | கருத்துகள் (13) | |
Advertisement
விழுப்புரம்: விழுப்புரத்தில் தள்ளு வண்டியில் இறந்து கிடந்த சிறுவன் கொலை செய்யப்படவில்லை. குடலில் உணவு இல்லாததால் பட்டினியால் இறந்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார், 45; சலவைத் தொழிலாளி. இவர், சென்னை, நெடுஞ்சாலையோரம் தள்ளு வண்டியில் துணிகளுக்கு இஸ்திரி போட்டு வருகிறார். கடந்த 15ம் தேதி காலை 6:00 மணியளவில் 4 வயது சிறுவன்
சிறுவன், பட்டினி, தள்ளுவண்டி, சடலம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் தள்ளு வண்டியில் இறந்து கிடந்த சிறுவன் கொலை செய்யப்படவில்லை. குடலில் உணவு இல்லாததால் பட்டினியால் இறந்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார், 45; சலவைத் தொழிலாளி. இவர், சென்னை, நெடுஞ்சாலையோரம் தள்ளு வண்டியில் துணிகளுக்கு இஸ்திரி போட்டு வருகிறார். கடந்த 15ம் தேதி காலை 6:00 மணியளவில் 4 வயது சிறுவன் உடல் துண்டால் போர்த்தப்பட்ட நிலையில் தள்ளு வண்டியில் கிடந்தது. சிறுவன் யார் என்ற விபரம் தெரியவில்லை.விழுப்புரம் மேற்கு போலீசார் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். எஸ்.பி., ஸ்ரீநாதா உத்தரவின் பேரில், 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இறந்த சிறுவன் அங்கன்வாடி மையங்களில் அரசு வழங்கும் சீருடை அணிந்திருந்தான். அதனால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,300 அங்கன்வாடி மையங்களுக்கும், சிறுவனின் புகைப்படத்தை போலீசார் அனுப்பினர். ஆனாலும், இறந்த சிறுவன் குறித்த விபரம் தெரியவில்லை.

இந்நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.


latest tamil newsஇது குறித்து எஸ்.பி., ஸ்ரீநாதா கூறுகையில், 'சிறுவனின் உடற்கூராய்வு முடிவடைந்தது. சிறுவன் கொலை செய்யப்படவில்லை. இயற்கையாக இறந்துள்ளார். சிறுவன் குடலில் உணவு மற்றும் தண்ணீர் இல்லை. இதனால், சிறுவன் 2 நாட்கள் உணவு இல்லாமல் இருந்திருக்கலாம். அதன் காரணமாகவும் அவர் இறந்திருக்க வாய்ப்புள்ளது. முதலில், சிறுவன் யார் என அடையாளம் காணும் கோணத்தில் விசாரித்து வருகின்றோம். இதையடுத்து, அவர் இறப்பு குறித்த விபரங்கள் தெரிய வரும்' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
20-டிச-202106:08:07 IST Report Abuse
Mani . V ".......கடந்த 15ம் தேதி காலை 6:00 மணியளவில் 4 வயது சிறுவன் உடல் துண்டால் போர்த்தப்பட்ட நிலையில் தள்ளு வண்டியில் கிடந்தது......." பசியால் இறப்பதற்கு முன் அந்த சிறுவன் தன்னை துண்டால் போர்த்திக் கொண்டது குளிரில் இருந்து தற்காத்துக் கொள்ளவாக இருக்குமோ? என்னமோ நீங்க சொன்னா சரிதான்.
Rate this:
Cancel
seth - pondi,இந்தியா
20-டிச-202101:17:55 IST Report Abuse
seth என்ன சோகம் இது? சிறு குழந்தை அய்யா ?
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
19-டிச-202123:50:41 IST Report Abuse
Matt P எல்லாவற்றுக்கும் அரசுகளை குறை கூறுவதை விட்டு விட்டு, பசியால் வாடும் ஆதரவற்ற குழந்தைகளை கண்டால் கருணை காட்டலாமே. காக்கை குருவி எங்கள் ஜாதி என்றான் பாரதி. தனியொரு வொருவனுக்கு உணவில்லையென்றால் ...என்றான் அவன் தாசன். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அமெரிக்கா பணக்கார நாடு என்று சொல்லி கொள்வார்கள். இங்கேயும் வீடற்று தெருவோரத்தில் உறங்கி உண்ணும் மக்களும் வாழ்கிறார்கள். நான் வாழும் வூரில் நாஷ்வில் மிஷன் என்று இருக்கிறது. எல்லா நகரங்களிலும் அந்த வூரின் பெயரில் இருக்கலாம். பகலெல்லாம் அலைந்தாலும் மாலை நேரத்தில் அங்கு போய் குளித்து உணவு உண்டு கொள்ளலாம். இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பதற்காக அங்கு உணவு கொண்டு வருவார்கள் . பல உணவு விடுதிகளிலிருந்தும் விரயமாகும் உணவுகள் அங்கு வந்து சேரும். வீட்டில் கோபித்து கொண்டு கூட குழந்தைகள் வெளியூருக்கு ஓடி வேலை செய்யும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X