பஞ்சாப் பொற்கோவிலில் சீக்கிய கொடியை அவமதிக்க முயற்சி? மேலும் ஒருவர் அடித்து கொலை| Dinamalar

பஞ்சாப் பொற்கோவிலில் சீக்கிய கொடியை அவமதிக்க முயற்சி? மேலும் ஒருவர் அடித்து கொலை

Updated : டிச 19, 2021 | Added : டிச 19, 2021 | கருத்துகள் (22) | |
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தெய்வ நிந்தனையில் ஈடுபட்டதாக ஒருவர் அடித்து கொல்லப்பட்ட நிலையில், சீக்கிய கொடியை அவமதிக்க முயன்றதாக குற்றஞ்சாட்டி மற்றொரு நபரும் போலீசார் முன்னிலையில் உள்ளூர்வாசிகளால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பொற்கோவிலில் நேற்று மாலை பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த போது, கருவறைக்குள் ஒருவர் அத்துமீறி
Man, Beaten, Death,  Punjab, Sacrilege, Attempt,

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தெய்வ நிந்தனையில் ஈடுபட்டதாக ஒருவர் அடித்து கொல்லப்பட்ட நிலையில், சீக்கிய கொடியை அவமதிக்க முயன்றதாக குற்றஞ்சாட்டி மற்றொரு நபரும் போலீசார் முன்னிலையில் உள்ளூர்வாசிகளால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொற்கோவிலில் நேற்று மாலை பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த போது, கருவறைக்குள் ஒருவர் அத்துமீறி நுழைந்துள்ளார். மேலும், அங்கிருந்த வாளை எடுத்த அவர், சீக்கிய சமய குருவை நோக்கி சென்றுள்ளார். அவரை பொற்கோவில் நிர்வாகத்தினர் பிடித்த நிலையில், கருவறைக்குள் குதித்து தெய்வ நிந்தனையில் ஈடுபட்டதாக ஆத்திரமடைந்த மக்கள் கடுமையாக தாக்கினர். இதில், அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு 25-30 வயதிற்குள் இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். எதற்காக அங்கு வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள சரண்ஜித் சிங் சன்னி, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.


latest tamil newsஇதனிடையே, இந்த சம்பவம் பரபரப்பு அடங்குவதற்குள், இன்று சீக்கிய மதக்கொடியை அவமதித்ததாக, நிஜாம்பூர் கிராம மக்கள் ஒருவரை பிடித்து கடுமையாக தாக்க துவங்கினர். தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து, அந்த நபரை தங்களது கஸ்டடியில் கொண்டு வந்தனர். அப்போது, போலீசாருக்கும், அங்கிருந்தவர்களுக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில், அந்த நபரை உள்ளூர் மக்கள் அடித்து கொன்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X