நிதித்துறை வளாக பெயர் மாற்றம்: அதிமுக எதிர்ப்பு

Updated : டிச 19, 2021 | Added : டிச 19, 2021 | கருத்துகள் (13) | |
Advertisement
சென்னை: நிதித்துறை வளாகத்திற்கு சூட்டப்பட்ட அம்மா வளாகம் என்ற பெயரை மாற்றிவிட்டு, பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை என பெயர் சூட்டுவதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜெயலலிதாவை கவுரவிக்கும் வகையில், அதிமுக ஆட்சி காலத்தில் நந்தனத்தில்
பன்னீர்செல்வம், பழனிசாமி

சென்னை: நிதித்துறை வளாகத்திற்கு சூட்டப்பட்ட அம்மா வளாகம் என்ற பெயரை மாற்றிவிட்டு, பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை என பெயர் சூட்டுவதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜெயலலிதாவை கவுரவிக்கும் வகையில், அதிமுக ஆட்சி காலத்தில் நந்தனத்தில் அமைந்துள்ள நிதித்துறை வளாகத்திற்கு 'அம்மா வளாகம்' என பெயர் சூட்டப்பட்டது. அந்த பெயரை நீக்கிவிட்டு, 'பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை' என்று பெயர் சூட்டப்பட உள்ளதாக அனைத்து பத்திரிகைகளிலும் செய்தி வந்துள்ளன. அன்பழகன், நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு இலாகாக்களின் அமைச்சராக இருந்தவர். அங்கு, சிலை வைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.


சென்னை நந்தனத்தில் 'அம்மா வளாகம்' என்ற பெயரில் செயல்படும் நிதித்துறை வளாகத்திற்கு க அன்பழகன் பெயர் சூட்ட அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளைர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். நந்தனம் நிதித்துறை வளாகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் க அன்பழகனின் சிலையை, முதல்வர் திறக்க உள்ளதாகவும், வளாகத்திற்கு அவரது பெயரை வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சிலை வைப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், வளாகத்தின் பெயரை மாற்றுவது நாகரீகமற்ற செயல். ஒருவரை இழிவுபடுத்திவிட்டு இன்னொருவரை புகழ்வது போல் ஆகும். தமிழ் பண்பாடு, கலாச்சாரத்திற்கு எதிரான செயல். நந்தனம் நிதித்துறை வளாகத்தின் பெயரை மாற்றும் முடிவை முதல்வர் ஸ்டாலின் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

latest tamil news



அதேசமயத்தில், பெயரை மாற்றுவது நாகரீகமற்ற செயல். ஒருவரை இழிவுபடுத்திவிட்டு, மற்றொருவரை புகழ்வது போல் ஆகும். இதுபோன்ற செயல், தமிழ் பண்பாட்டிற்கு தமிழ் கலாசாரத்திற்கு எதிரான செயல். பெயர் மாற்றம் செய்யப்படுவது அநாகரீகத்தின் உச்சம். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம். இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறோம். பெயரை மாற்றுவதை உடனடியாக கைவிட வேண்டும். புதியதாக வேறு மாளிகை தமிழக அரசால் கட்டப்படும்போது அதற்கு அவர் பெயர் சூட்டலாம் என்றும் கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் பன்னீர்செல்வமும், பழனிசாமியும் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
20-டிச-202118:30:50 IST Report Abuse
வெகுளி //அவர் கஷ்டப்பட்டு கட்டிய சட்டசபை// ஹிஹி....அதிமுகவில் ஆயிரம் அடிமைகள் இருக்கலாம்.... ஆனால் கொத்தடிமைகள் என்றால் அது ஊபீஸ்தான்....
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
20-டிச-202106:02:27 IST Report Abuse
Indhuindian பெரியாரின் உண்மையான சீடன் அவர் காட்டிய வழியில் சிறிதும் பிலாகாது நடை முறையில் காட்டியவர். தன்னுடைய மகளின் கல்லூரி தோழியை மணந்தவர் இவருக்கு பெரியார் விருது கொடுத்து மற்றும் சிலை வைத்து எல்லா மரியாதையும் செய்வதே திராவிட சித்தாந்தத்தை போற்றும் வளர்க்கும் வழி
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
20-டிச-202103:46:52 IST Report Abuse
BASKAR TETCHANA கடைசிவரை அரசாங்க காசிலேயே வாழ்ந்த இரண்டாவது தலை முதல் தலை கட்டுமரம். பேசாமல் கருணாநிதி மனைவி பெயர் தயாளு என்று வைத்து இருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X