திருவள்ளுவர் கிறிஸ்துவர் என்பது பொய் : கருத்தரங்கில் சாமி தியாகராஜன் ஆவேசம்

Updated : டிச 21, 2021 | Added : டிச 19, 2021 | கருத்துகள் (47) | |
Advertisement
சென்னை:''திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்துவர் எனவும், திருக்குறள் பைபிள் வழி வந்த நுால் எனவும் பரப்பப்படும் புரட்டுகளுக்கு தமிழறிஞர்கள் வாய் திறக்காதது ஏன்,'' என பேராசிரியர் சாமி தியாகராஜன் கேள்வி எழுப்பினார்.இந்து மக்கள் கட்சி சார்பில், சென்னை தி.நகரில் உள்ள தருமை ஆதீனத்தில், நேற்று திருக்குறள் மாநாடு நடந்தது. அதில், 'திருவள்ளுவர் கிறிஸ்துவரா;
திருவள்ளுவர் கிறிஸ்துவர் என்பது பொய் : கருத்தரங்கில் சாமி தியாகராஜன் ஆவேசம்

சென்னை:''திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்துவர் எனவும், திருக்குறள் பைபிள் வழி வந்த நுால் எனவும் பரப்பப்படும் புரட்டுகளுக்கு தமிழறிஞர்கள் வாய் திறக்காதது ஏன்,'' என பேராசிரியர் சாமி தியாகராஜன் கேள்வி எழுப்பினார்.
இந்து மக்கள் கட்சி சார்பில், சென்னை தி.நகரில் உள்ள தருமை ஆதீனத்தில், நேற்று திருக்குறள் மாநாடு நடந்தது. அதில், 'திருவள்ளுவர் கிறிஸ்துவரா; திருக்குறள் கிறிஸ்துவ நுாலா?' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
இதில், பேராசிரியர் சாமி தியாகராஜன் பேசியதாவது:திருக்குறள் உலக மக்களுக்கான நெறிகளை சொல்கிறது. இந்தியர்கள், ஹிந்துக்களின் தர்மங்களை தாங்கி உள்ளதுஆனால், தமிழக அரசின் சார்பில் இயங்கும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் சா.வே.சுப்பிரமணியன், கா.சுப்பிரமணியன் ஆகியோரின் வழிகாட்டுதலில், தெய்வநாயகம் என்பவர், திருக்குறளுக்கு உரை எழுதி முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
அதில், திருக்குறள் என்பது ஏசுவின் போதனைகள் என்றும், திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்துவர் என்றும் விளக்கி உள்ளார். இதற்கு முன், ஜி.யு.போப் அதற்கான விதையை துாவி உள்ளார்.இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், திருச்சியில் நடந்த மாநாட்டில், அதை ஏற்கும் வகையில் பேசியுள்ளார். இதுபோல, தமிழ் நுால்கள் அனைத்தையும், கிறிஸ்துவர்கள் சுவீகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு, தமிழர்களே வக்காலத்து வாங்கும் நிலையும் உருவாகி உள்ளது. இதை தட்டிக்கேட்க வேண்டிய தமிழறிஞர்கள், திராவிடர் என்ற சொல்லால் நீர்த்து போயுள்ளனர். திருவள்ளுவர், தமிழர்களின் வாழ்வியலை தான் பதிவு செய்துள்ளார். ஆனால், திருக்குறளுக்கு உரை எழுதியோர் எல்லாம் பொய்யாக எழுதியுள்ளதாகவும், கிறிஸ்தவ நெறிகளை போதிப்பதாகவும், ஒவ்வொரு குறளுக்கும் இட்டுக்கட்டிய தெளிவுரையையும் தெய்வநாயகம் விளக்கியுள்ளார்.
அவர், அதிகாரத்தில் உள்ள உலக கிறிஸ்துவர்களுடன் தொடர்பில் உள்ளவர். அவர் எழுதியதை, உலகம் முழுக்க பரவலாக்கி ஆவணப்படுத்த துடிக்கிறார். இதை எதிர்க்க தமிழர்கள் ஒருங்கிணையாவிட்டால், தமிழனின் மொழியும், இனமும், பண்பாடும் சூறையாடப்படும் ஆபத்து உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியதாவது:தமிழர்களின் ஆதி சமயங்களான சைவமும், வைணவமும் விவிலியத்தில் இருந்து தோன்றியவை என தெய்வநாயகம் சொல்கிறார். இதுபோன்ற, சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி, தமிழர்களை பிளவுபடுத்தி குளிர்காயும் வகையில் தான், திருக்குறளுக்கு மிகவும் மோசமான வகையில் உரை எழுதியுள்ளார். இதை பல்கலையும் அங்கீகரித்துள்ளது. இதனால், திருவள்ளுவரின் புகழுக்கும் களங்கம் ஏற்படுகிறது. இதை தடுத்தாக வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
கவிஞர் நந்தலாலா, பேராசிரியர் கல்யாணசுந்தரம், இந்து மக்கள் கட்சி செய்தி தொடர்பாளர் சடகோபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
20-டிச-202123:26:38 IST Report Abuse
PRAKASH.P When people are struggling with so many problems... These guys are arguing for a man died so long ago..
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
21-டிச-202115:41:51 IST Report Abuse
NicoleThomsonஐயோ ஆங்கிலம் புல்லரிக்குது...
Rate this:
sankar - Nellai,இந்தியா
21-டிச-202117:16:51 IST Report Abuse
sankarசரி - நீ போயி தூங்கு தம்பி...
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
20-டிச-202122:36:05 IST Report Abuse
jagan சைவம் வைணவம் கௌமாரம் காணாபத்யம் மாதிரி கிறித்துவதையும் ஸ்வாகா செய்து ஏப்பம் விடும் சமயம். என்ன, கிறித்துவுக்கு ஒரு சிலை, எண்ணெய் விளக்கு பதில் மெழு வர்த்தி, அரிசி சோறு பதில் அப்பம், காவிக்கு பதில் வெள்ளை துண்டு எண்டு போட்டு, நவகிரகங்ளுடன் ஒரு ஓரமா உக்காரவச்சு விட்டு நம்ம நிஜ ஆன்மீகத்தில் ஈடுபடலாம்
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
20-டிச-202120:25:43 IST Report Abuse
jagan திருக்குறளில் கள்ளுண்ணாமை ஒரு அதிகாரம். இங்கே சர்ச்சிலேயே (புனித) ஒயின் குடிக்கிறார்கள் ஆண்களும் பெண்களும்.
Rate this:
sridhar - Chennai,இந்தியா
20-டிச-202122:08:53 IST Report Abuse
sridharஅது மட்டும் அல்ல, புலால் உண்ணாமை, மறுபிறவி, அந்தணர், இலக்குமி, இந்திரன், வருணன் எல்லாம் இருக்கு திருக்குறளில். திருக்குறள் படிக்காத அறிவிலிகள் தான் இது கிறிஸ்துவ மதத்தை தழுவியது என்பார்கள் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X