'அரசு ஊழியர்கள் இல்லாவிட்டால் அரசாங்கமே இல்லை'

Updated : டிச 21, 2021 | Added : டிச 19, 2021 | கருத்துகள் (32) | |
Advertisement
சென்னை:''அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம்; அவர்கள் இல்லாவிட்டால் அரசாங்கம் இல்லை '' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை மாதவரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள்சங்க 14வது மாநாடு நேற்று நடந்தது. அதன் நிறைவு விழாவில் முதல்வர் பேசியதாவது:தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த போதெல்லாம் அரசு ஊழியர்களுக்கு துணையாகவே இருந்துள்ளது; இப்போதும் அதுதான் நிலை. அரசு ஊழியர்கள் தான்
'அரசு ஊழியர்கள் இல்லாவிட்டால் அரசாங்கமே இல்லை'

சென்னை:''அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம்; அவர்கள் இல்லாவிட்டால் அரசாங்கம் இல்லை '' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை மாதவரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள்சங்க 14வது மாநாடு நேற்று நடந்தது. அதன் நிறைவு விழாவில் முதல்வர் பேசியதாவது:தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த போதெல்லாம் அரசு ஊழியர்களுக்கு துணையாகவே இருந்துள்ளது; இப்போதும் அதுதான் நிலை. அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம்; அவர்கள் இல்லாவிட்டால் அரசாங்கம் இல்லை. அரசு ஊழியர்கள் எப்போதும் என்னுடன் இருப்பவர்கள்.
அரசு ஊழியர்கள் பணி காலத்தில் இறந்தால் அவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை திருமணகடன் வீடு கட்ட கடன் என பல்வேறு உதவிகளை தி.மு.க. அரசு செய்துஉள்ளதை யாரும் மறந்து விட முடியாது.அந்த வகையில் இப்போதும் ஆட்சிக்கு வந்த ஆறேழு மாதங்களில் ஏராளமான திட்டங்கள் அரசு ஊழியர்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளதை அறிவீர்கள்.

குடும்ப பாதுகாப்பு நிதி 3 லட்சம்ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.கடும் நிதி நெருக்கடி இருந்தாலும் இந்தாண்டு முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைந்துள்ளனர். அரசு ஊழியர்கள் முந்தைய ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய நாட்களை பணிக் காலமாகவும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மோசமான நிதி நிலை ஏற்பட்டு 5 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை இருந்தாலும் இன்று புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளோம். சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் வெள்ள நிவாரண நிதி ஆகியவற்றையும் மத்திய அரசு வழங்கவில்லை.ஆனாலும் மக்கள் நலன் அரசு ஊழியர்களின் நலனை காக்க அரசு தவறாது.

அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு நிச்சயமாக செயல்படுத்தும். அந்த வகையில் நான் உங்களில் ஒருவனாக மக்களின் ஊழியனாக செயலாற்றுவேன்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
22-டிச-202104:49:07 IST Report Abuse
meenakshisundaram முக அந்த காலத்திலேயே அரசு ஊழியர்களின் வாக்குகளின் மேல் கண் வைத்தவர் ஆவார் .அரசு ஊழியர் சங்க தலைவரை தொழிற்சங்க தலைவர் போலவே நினைத்து கைக்குள்ளே போட்டு ஆட்சி நடத்தினார் ஸ்டாலின் அதே போல பேசியுள்ளாரே தவிர வாக்கை காப்பாத்துவாரா என்று சொல்ல முடியாது, ஏனெறால் பெயருக்குத்தான் இது 'விடியல் 'அரசு என்று அழைக்கப்படுகிறது உண்மையில் 'vidiyaadha 'அரசே ஆகும்
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
20-டிச-202122:28:02 IST Report Abuse
Mohan எப்பா. இப்பதான் தெரிஞ்சிருக்கு எப்படி நம்ம குடும்பத்துக்கு இவ்வளவு சொத்து கிடைத்ததுன்னு.
Rate this:
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
20-டிச-202121:59:03 IST Report Abuse
Oru Indiyan அரசு இல்லாவிட்டால் அரசு ஊழியர்களே இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X