பாலியல் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்:த.மா.கா., வாசன் யோசனை

Added : டிச 19, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
திண்டுக்கல்-'பாலியல் சீண்டலில் ஈடுபடுவோருக்கு துாக்கு தண்டனை வழங்க வேண்டும்' என, திண்டுக்கல்லில் த.மா.கா., தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.அவர் கூறியதாவது:கடந்த 3 வாரங்களாக பார்லிமென்டில் தேவையில்லாத பிரச்னைகளை கொண்டு வந்து எதிர்க்கட்சியினர் நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக செயல்படுகின்றனர். கொரோனாவுக்கு பின் இந்தியாவின் பொருளாதார நிலை படிப்படியாக உயரக்கூடிய
 பாலியல் குற்றங்களுக்கு தூக்கு  தண்டனை வழங்க வேண்டும்:த.மா.கா., வாசன் யோசனை

திண்டுக்கல்-'பாலியல் சீண்டலில் ஈடுபடுவோருக்கு துாக்கு தண்டனை வழங்க வேண்டும்' என, திண்டுக்கல்லில் த.மா.கா., தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.

அவர் கூறியதாவது:கடந்த 3 வாரங்களாக பார்லிமென்டில் தேவையில்லாத பிரச்னைகளை கொண்டு வந்து எதிர்க்கட்சியினர் நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக செயல்படுகின்றனர். கொரோனாவுக்கு பின் இந்தியாவின் பொருளாதார நிலை படிப்படியாக உயரக்கூடிய சூழலில் பார்லிமென்டில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவது அவசியம்.எனவே அவர்கள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு மசோதாக்களை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

திருநெல்வேலியில் பள்ளி கழிவறை கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தது வருத்தத்திற்குரியது.இனி இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது. தொடர் மழை காரணமாக பல பள்ளிகளில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. அதை உடனே சரிசெய்ய வேண்டும். பாலியல் ரீதியான சீண்டல்கள் இந்தியாவிலேயே இருக்கக் கூடாது என்பது தான் அனைவரின் எண்ணம். அதற்கு தனிமனித ஒழுக்கம் தேவை. அனைவரும் தனிமனித ஒழுக்கத்துடன் இருக்க உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அதை மீறி தவறு செய்பவர்களுக்கு துாக்கு தண்டனை வழங்க வேண்டும். சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
20-டிச-202119:24:24 IST Report Abuse
spr சிறப்பான கருத்தே மாற்று கருத்து இல்லை ஆனால் இவருக்கெல்லாம் ஆட்சியமைக்க வாய்ப்பில்லை என்பதால் துணிந்து இப்படிக் கருத்துக் கூறுகிறார் போலும் ராஜீவ் கொலை போல திட்டமிட்டு இந்திய இறையாண்மையை அவமதிக்கும் கொலைகள் நிர்பயா கற்பழிப்புக்கு கொலை போன்ற கொடூரக் கற்பழிப்பு கொலை உணவு மருந்துகளில் கலப்படம் செய்வோர் போன்ற குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிப்பதோடு மேல் முறையீடுகளும் ஆளுநர் குடியரசுத்தலைவர் இடையூறுகளும் இன்றி தண்டனை விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் நிதி நிறுவனங்கள் அமைத்து மக்களை ஏமாற்றுவோர் வங்கி கடன் திருப்பி அளிக்காதவர் சொத்துக்களை பறிமுதல் செய்து அவர் தொடர்புடைய எவரும் எக்காலத்தும் அனுபவிக்க இயலாதபடி செய்ய வேண்டும் அவற்றை ஏலத்தில் விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
20-டிச-202111:27:06 IST Report Abuse
NicoleThomson சுந்தரமூர்த்தி அவர்களே, அவர்களுக்கு தண்டனை என்றால் எந்த கோட்டாவும் அவர்களுக்கு பயனற்றதாகி விட வேண்டும், இதே சமூகத்தில் அவர்கள் தீண்டத்தகாதவர்கள் அளிக்கப்படவேண்டும் ஆனால் கழகங்கள் இப்படி செய்தால் என்னாகும் என்று தெரியுமா ?
Rate this:
Cancel
R Kumar - Triolet,மொரிஷியஸ்
20-டிச-202110:39:32 IST Report Abuse
R Kumar எந்த ஒரு சட்டமும் இங்கு ஓட்டுவங்கியை எதிர்பார்த்துதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது . எனவே இதெல்லாம் நடப்பது என்பது ஒரு கனவுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X