திண்டுக்கல்-'பாலியல் சீண்டலில் ஈடுபடுவோருக்கு துாக்கு தண்டனை வழங்க வேண்டும்' என, திண்டுக்கல்லில் த.மா.கா., தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.
அவர் கூறியதாவது:கடந்த 3 வாரங்களாக பார்லிமென்டில் தேவையில்லாத பிரச்னைகளை கொண்டு வந்து எதிர்க்கட்சியினர் நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக செயல்படுகின்றனர். கொரோனாவுக்கு பின் இந்தியாவின் பொருளாதார நிலை படிப்படியாக உயரக்கூடிய சூழலில் பார்லிமென்டில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவது அவசியம்.எனவே அவர்கள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு மசோதாக்களை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
திருநெல்வேலியில் பள்ளி கழிவறை கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தது வருத்தத்திற்குரியது.இனி இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது. தொடர் மழை காரணமாக பல பள்ளிகளில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. அதை உடனே சரிசெய்ய வேண்டும். பாலியல் ரீதியான சீண்டல்கள் இந்தியாவிலேயே இருக்கக் கூடாது என்பது தான் அனைவரின் எண்ணம். அதற்கு தனிமனித ஒழுக்கம் தேவை. அனைவரும் தனிமனித ஒழுக்கத்துடன் இருக்க உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அதை மீறி தவறு செய்பவர்களுக்கு துாக்கு தண்டனை வழங்க வேண்டும். சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE