சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

சிறப்பு அந்தஸ்து சாத்தியமில்லை!

Updated : டிச 21, 2021 | Added : டிச 20, 2021 | கருத்துகள் (1)
Advertisement
வி.ஹெச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:ஜம்மு - காஷ்மீர் மாநிலம் மட்டும், அரசியல் சாசனம் ஷரத்து, '370' மற்றும் '35 ஏ' அடிப்படையில் சிறப்பு அந்தஸ்து, சலுகைகளை அனுபவித்து வந்தது.'ஜனநாயகம், மக்களாட்சி' என்ற பெயரில் ஷேக் அப்துல்லா குடும்பம், முப்தி முகமது குடும்பம் மட்டும், தலா மூன்று மற்றும் இரண்டு தலைமுறையாக, அங்கு ஆட்சியை
 இது உங்கள் இடம்

வி.ஹெச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் மட்டும், அரசியல் சாசனம் ஷரத்து, '370' மற்றும் '35 ஏ' அடிப்படையில் சிறப்பு அந்தஸ்து, சலுகைகளை அனுபவித்து வந்தது.'ஜனநாயகம், மக்களாட்சி' என்ற பெயரில் ஷேக் அப்துல்லா குடும்பம், முப்தி முகமது குடும்பம் மட்டும், தலா மூன்று மற்றும் இரண்டு தலைமுறையாக, அங்கு ஆட்சியை கைப்பற்றின.
கடந்த 2019 ஆகஸ்டில் ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு ரத்து செய்தது. குலாம்நபி ஆசாத், தனி ஒருவராக தன் ஆட்சேபனையை பதிவு செய்தார்; ஆனால் எடுபடவில்லை. இருப்பினும் காங்கிரசின் தேசிய ஒருமைப்பாடு கொள்கை மீதுள்ள பிடிப்பு காரணமாக, கள உண்மையை ஏற்றுக் கொண்டார்.
சமீபத்தில் குலாம்நபி ஆசாத், 'அரசியல் சட்ட பிரிவு '370, 35 ஏ' நீக்கம் குறித்து இனி பேசி பயனில்லை. ஜம்மு - காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீட்க வேண்டும். சட்டப் சபை தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். மாநிலத்தின் சாமானிய மக்கள் மனநிலையை புரிந்து கொள்ள தேர்தல் அவசியம்' என தெரிவித்துள்ளார்.
அவரின் கூற்று 100க்கு 100 உண்மை.இனி மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது சாத்தியம் இல்லை. ஏனெனில் அனைத்து மாநிலங்களும் அதே கோரிக்கையை கிளப்பலாம். இதனால் தேச ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படும்.
அம்மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, குலாம்நபி ஆசாத் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.'மாநில பூர்வீக மக்களுடன், தேசிய மாநாடு கட்சி இணைந்து, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்காக போராடும்' என, அக்கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா முழங்கியுள்ளார். அவரின் எண்ணம், ஈடேறாது.சிறப்பு அந்தஸ்து மீட்பு கோரிக்கை, 'திராவிட நாடு' கோரிக்கை போலத் தான் முடியும்!
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து சாத்தியம் இல்லை என, குலாம் நபி ஆசாத் வெளிப்படையாக உண்மையை சொல்லி விட்டார்.நாட்டின் மீது அக்கறை இருந்தால், காங்கிரஸ் மேலிடம் அதை வரவேற்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் அதை செய்யுமா என்பது சந்தேகம் தான்.


குற்றங்களுக்குசினிமா தான்காரணம்!


ச.பிரசன்னா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
சினிமாக்காரர்களை நம்பி சீரழிந்தது தமிழக அரசியல் மட்டுமல்ல, மக்களும் தான் என்பதற்கு உதாரணம், ஆடு திருடர்கள் செய்த எஸ்.எஸ்.ஐ., படுகொலை.கடந்த, 1984ல் வெளிவந்த, 100வது நாள் படம் பார்த்து, ஜெயபிரகாஷ் என்பவன், ஒன்பது பேரை கொலை செய்து, வீட்டின் சுவரில் புதைத்து வைத்தான்.
சூர்யா நடித்த, தானா சேர்ந்த கூட்டம் படத்தை பார்த்து, ஆற்காட்டில் போலியாக ஐ.டி., 'ரெய்டு' நடத்தி, 6 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவத்தில், ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். விஜய் நடிப்பில் வெளியான, மாஸ்டர் படம், திருச்சி எஸ்.எஸ்.ஐ., படுகொலைக்கு காரணமாக இருந்திருக்கலாம்.
அப்படத்தில் வில்லன், குற்றச்செயல்களில் சிறார்களை பயன்படுத்துவான். அதற்கு, 'கொலை செய்தாலும் சிறார்களுக்கு தண்டனை கிடையாது. அவனை யாரும் அடிக்க கூடாது என சட்டமே இருக்கிறது' என, பாடமே எடுத்துள்ளனர்.சாதாரண நடிகனின் படம் என்றாலே, அது சிறார்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும், மிக பிரபலமாக உள்ள விஜய், விஜய் சேதுபதி நடித்த படத்தில் இப்படி சொல்லிக் கொடுத்தால், சிறுவர்கள் கத்தி துாக்காமல் என்ன செய்வர்?
ஆடு திருடர்களான சிறுவர்களுக்கு, எஸ்.ஐ.,யையே படுகொலை செய்ய துணிச்சல் எப்படி வந்திருக்கும்?சினிமாவும், மதுவும் தான் காரணமாக இருக்கும்.சினிமா துறையினரே... எம்.ஜி.ஆர்., படம் போல நல்லொழுக்கம், நீதி சொல்ல முடியாவிட்டாலும் பரவாயில்லை... எப்படியெல்லாம் குற்றம் செய்யலாம்; அதில் இருந்து தப்பிக்க சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் என்ன என்பதை விளக்கி படம் எடுக்காதீர்.நீங்கள் பணம் சம்பாதிப்பதற்காக, நாட்டை சுடுகாடாக மாற்றாதீர்!


இதுவும் தேச துரோகம் தான்!


சி.ஆர்.குப்புசாமி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
பார்லிமென்ட் முடக்கப்படுவது என்பது, நம் நாட்டின் சாபக்கேடுகளில் ஒன்று.பார்லிமென்ட் என்பது, ஆளுங்கட்சியின் அரசவை அல்ல; அது ஜனநாயகத்தின் துாண். ஒரு நாட்டின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் திறன் படைத்தது.இந்த அமைப்பு செயல்படவில்லை என்றால், நாட்டின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாக மாறுகிறது.
இப்போது பார்லிமென்ட் முடக்கப்பட்டதற்கு, எம்.பி.,க்கள் 12 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டது, காரணமாக கூறப்படுகிறது. ஆனால் அதன் உள்ளே புதைந்து கிடக்கும் உண்மையை, மக்கள் அறிய வேண்டும்.அந்த எம்.பி.,க்கள் 12 பேரும், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் அறிவுறுத்தல் படியே, பார்லிமென்ட் முடக்கப்படுவதற்கான சூழலை உருவாக்கி உள்ளனர்.
பார்லிமென்டில் மசோதா நகலை கிழித்து எறிந்து, மேஜை மீது ஏறி ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள், தன்னிச்சையாக இச்செயலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இல்லை.கட்சியின் அறிவுறுத்தலின்படியே, அவர்கள் இந்த அநாகரிக செயலில் ஈடுபட்டிருப்பர்.ஆக, அந்த 12 பேர் சார்ந்துள்ள கட்சியின் தலைமை கண்ணசைத்தால், இந்த பிரச்னைக்கு ஒரு நொடியில் தீர்வு கிடைத்து விடும்.
ஆனால், நம் நாட்டின் எதிர்க்கட்சிகள் அதை விரும்பவில்லை. பார்லிமென்ட் முடங்க வேண்டும் என்பதே, அவற்றின் திட்டம்.'எய்தவனை விடுத்து, அம்பை நோவது' போல, நாம் அந்த 12 எம்.பி.,க்கள் தான், பார்லிமென்ட் முடக்கத்திற்கு காரணம் என நினைத்து கொண்டிருக்கிறோம். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு, நாட்டின் இறையாண்மை காக்க வேண்டும். பார்லிமென்ட் முடக்கத்தை, தேச துரோகமாக கருத வேண்டும்.Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
veeramani - karaikudi,இந்தியா
20-டிச-202110:37:17 IST Report Abuse
veeramani ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு கடந்த எழுபது ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்து கொடுத்து, இரண்டு குடும்பங்கள் மட்டும் அனுபவித்தனர் என தெரியவருகிறது. மக்கள் இன்னும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். மக்கள் இன்னும் சிரமப்படுகிறார்கள். ஜம்மு காஷ்மீர் என்பது இந்திய யூனியன் அரசிற்கு கட்டுப்பட்டது. இந்தியர் எவரும் அங்கு செல்லலாம், வாசிக்கலாம், தொழில் செய்யலாம். எனவே காஷ்மீராய் மேம்படுத்தி நல்ல சுற்றுலா தளம் ஆக்குங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X