நாயர் கொடுத்த இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''கொஞ்சம் 'ஓவரா' கிண்டல் பண்ணிட்டோமோன்னு வருத்தப்படறார் ஓய்...'' என முதல் தகவலுக்கு வந்தார் குப்பண்ணா.
''யாரு, எதுக்காக வருத்தப்படுறாங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''கடந்த ஆட்சியில, அ.தி.மு.க., - ஐ.டி., அணியில இருந்த, 'முருக'நாதன், தி.மு.க.,வை கடுமையா விமர்சிச்சு சமூக வலைதளங்கள்ல பதிவு போட்டார் ஓய்...
''தி.மு.க., இனி ஆட்சிக்கே வர முடியாது என்பது உட்பட அவரின் பதிவு எல்லாம், வேகமாக பரவிடுத்து... இப்போ ஆட்சி மாறவும், தி.மு.க.,வுக்கு தாவ, 'நுால்' விடறாராம்...
விஷயம் தெரிஞ்ச தி.மு.க.,வினர், 'அவர் நம்ம கட்சியை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணினார் தெரியுமோ'ன்னு, தலைமைக்கு புகார் அனுப்பியிருக்கா ஓய்...''இதனால, கொஞ்சம் ஓவரா தான் தி.மு.க.,வை திட்டிட்டோமோன்னு அவர் வருத்தப்படுறாராம் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''எரியுற வீட்டுல பிடுங்குற கதையா இருக்குதுங்க...'' என அடுத்த தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.
''என்ன, ஏதுன்னு விளக்கமா சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''நாமக்கல் மாவட்டம், கோவிந்தம்பாளையத்துல இருக்குற, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டுல, சமீபத்துல லஞ்ச ஒழிப்பு துறை 'ரெய்டு' நடந்துச்சுங்க...
''இதனால தங்கமணி வீட்டுக்கு, ஈரோடு நிருபர்கள், போட்டோகிராபர்கள் 12 பேர் போனாங்க... வீட்டுக்குள்ள அமளி துமளி நடக்கறப்போ, நிருபர்கள் சிலர் தங்களை, 'கவனிக்கணும்'னு தங்கமணிக்கு துாது விட்டாங்க...
''ஏற்கனவே ரெய்டால நொந்து போயிருந்த தங்கமணி தரப்பு, இந்த வசூல் நிருபர்களுக்கு, 'கவர்' கொடுத்து அனுப்பியிருக்காங்க... சில நிருபர்கள் இப்படி இருப்பதால தான், அரசியல்வாதிகளோட, 'ஆட்டம்' அதிகமாகிடுச்சுங்க...'' என விளக்கினார், அந்தோணிசாமி.
''புலி வருது புலி வருதுன்னு சொல்லிட்டே இருக்காவ வே...'' என கடைசி தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.
''ம்... விஷயத்தை சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''தமிழக அரசின் 'டாஸ்மாக்' நிறுவனம், நிர்வாக வசதிக்காக, 38 மாவட்டங்களா செயல்படுது... அவை தலா ஒரு மேலாளரின் கீழ் இயங்குது வே...''துணை ஆட்சியராக இருப்போரும், எம்.பி.ஏ., பட்டதாரிகளும் தொகுப்பூதிய அடிப்படையில மேலாளர்களா இருக்காவ வே..
.''இந்த மேலாளர்கள், கூடுதல் விலைக்கு மது பாட்டிலை விற்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காம, 'கமிஷன்' வசூலிக்குறதுல கவனமா இருக்காவ... இத பற்றி, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு புகார்கள் போயிட்டே இருக்கு வே...
''பலமுறை எச்சரிச்சும், அவங்க திருந்தாம தொடர்ந்து முறைகேடுல ஈடுபடுதாவ... இதனால, எம்.பி.ஏ., பட்டதாரிகளா இருக்குற, மாவட்ட மேலாளர்கள் 11 பேரை, சமீபத்தில் இடமாற்றம் செஞ்சிட்டாவ வே...
''இனியும் புகார் வந்தா, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, அரசு உத்தரவு போட்டுருக்காம்... ஆனா, அப்படி எல்லாம் எதுவும் செய்ய மாட்டாவ... சும்மா, படம் காட்டுதாவ வே...'' என விளக்கினார் அண்ணாச்சி.நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement