தர்மபுரி மாவட்டம் அரூரில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன், நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர்.
யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறு இல்லை. அதை, பழிவாங்கல் என்று சொல்ல முடியாது. தவறு இல்லை என்றால், நீதிமன்றத்தில் நிரூபித்து விடுதலையாகி வெளியே வரலாம்...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டும், அது பழிவாங்கல்ன்னு சொல்லுவாங்க...
அடேங்கப்பா, தி.மு.க.,வுக்கு, 'ஜால்ரா' அடிக்கிறதுல, கூட்டணி கட்சியினர் இடையே, பயங்கர போட்டி இருக்குது போல...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தபடியே ஆமோதித்தனர்.
அடேங்கப்பா, தி.மு.க.,வுக்கு, 'ஜால்ரா' அடிக்கிறதுல, கூட்டணி கட்சியினர் இடையே, பயங்கர போட்டி இருக்குது போல...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தபடியே ஆமோதித்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement