ஈரோடைச் சேர்ந்த மணிகண்டன்: அம்மா, வீட்டில் துணி தைப்பவர்; அப்பா டிரைவர். சிறு வயதில் இருந்தே பறை மீது ஈர்ப்பு அதிகம்னு சொல்லலாம். எங்க ஊரு கோவில் திருவிழாக்களில் பறை அடிப்பாங்க. ஒரு மணி நேர ஆட்டத்துக்குப் பின், ஆடிக் களைத்த கலைஞர்கள் தண்ணி கேட்டால், கொடுக்கத் தயங்கிட்டு, ஊர்க்காரங்க வீட்டுக்குள்ள போயிடுவாங்க. இதுக்கு காரணம், ஜாதின்னு அப்ப புரியல.
ஒரு ஜாதிப்பெயரைச் சொல்லி ஒதுக்குறது என்ன நியாயம்? ஒதுக்குறவங்க எல்லாரையும், நான் இசைக்கும் பறைச் சத்தத்தால் ஆட வைக்கணும்னு முடிவு செய்தேன். பறைக் கலைஞர்கள் பறை வாசிச்சு முடிச்சு ஓய்வு எடுக்கும் நேரம், நான் போய் பறையை எடுத்து வாசிப்பேன். வீட்டில் இருப்பவர்கள் முதல் சொந்தம் வரை அத்தனை எதிர்ப்பு!பறை மீதும், பழங்குடி இசைக்கருவிகள் மீதும் இருந்த ஆர்வத்துக்காகவே, 'சவுண்ட் இன்ஜினியரிங்' பிரிவைத் தேர்வு செய்தேன்.
இசைக்கருவிகள் பற்றி தேடுவதற்கு முழுச் சுதந்திரம் கிடைத்தது.இருளர், சோளகர், ஊராளி மக்கள் இருக்கும் திம்பம் பகுதியிலிருந்து, என் பயணத்தை துவங்கினேன். அவர்களிடம் பீனாச்சி, புகுரி, அரைத் தம்பட்டை போன்ற பழமையான இசைக்கருவிகள் இருந்தன.
வெவ்வேறு கிராமங்களுக்கு பயணம் செய்து, 'பவுனி, கொக்கரை, மரக்காப்பு, நெடுந்தாரை, வட்டக்கிளி, இடிகுவளை, மலையொலி மூங்கில், நெடுமக்குடி, சிரட்டைக் குழல், குட்டைத்தாரை'ன்னு, ௬௦க்கும் மேற்பட்ட கருவிகளை மீட்டெடுத்தேன். கரகம், ஒயில், பெரிய கம்பாட்டம், சாட்டைக்குச்சி ஆட்டம்ன்னு, 20க்கும் மேற்பட்ட ஆட்டக் கலைகள் ஆடுவேன்.
கின்னார இசையை மக்களிடம் சேர்க்க வேண்டும் என முடிவு செய்து, ஆவணப்படமாக்கினேன். கலைஞர்களுக்கு போதிய வருமானம் இல்லை. அவர்களுக்கு, அவர்களை எப்படி வெளிப்படுத்தி கொள்ள வேண்டும் என தெரியவில்லை. ஒரு ஐ.டி., ஊழியரின் சம்பளத்தை விட, 'ஆன்லைன்' மூலமாகப் பறைப் பயிற்சி கொடுத்து, நான் சம்பாதித்த காசு அதிகம்.
ஜாதி அடையாளங்களை கடந்து நம் இசைக் கருவிகளையும், இசைப் பண்பாட்டையும் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மேற்கத்திய இசையை அண்ணாந்து பார்ப்பதை விட்டுவிட்டு, நம் பாரம்பரிய இசைக்கும், கலைஞர்களுக்கும் ஆதரவாய் நிற்போம்!

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement