மழையை தாக்குபிடிக்காமல் குளங்கள் சேதமடைந்தது ஏன்?; சீரமைப்பில் முறைகேடு நடந்ததா என மாநகராட்சி விசாரணை!

Added : டிச 20, 2021 | கருத்துகள் (1)
Advertisement
சென்னை மாநகராட்சி சீரமைத்துள்ள 135 குளங்களில், மழையை தாக்குப்பிடிக்க முடியாமல், மூன்றுக்கும் மேற்பட்ட குளங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.இதனால், இதர குளங்களின் நிலை குறித்து தர ஆய்வு செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதில், முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.சென்னையில், 2015ம் ஆண்டில் பெய்த கன மழையால் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
 மழையை தாக்குபிடிக்காமல் குளங்கள் சேதமடைந்தது ஏன்?;   சீரமைப்பில் முறைகேடு நடந்ததா என மாநகராட்சி விசாரணை!



சென்னை மாநகராட்சி சீரமைத்துள்ள 135 குளங்களில், மழையை தாக்குப்பிடிக்க முடியாமல், மூன்றுக்கும் மேற்பட்ட குளங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.இதனால், இதர குளங்களின் நிலை குறித்து தர ஆய்வு செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதில், முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

சென்னையில், 2015ம் ஆண்டில் பெய்த கன மழையால் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின், நீர்நிலைகள் சீரமைக்கும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியது. ஆக்கிரமிப்பு மற்றும் பராமரிப்பில்லாமல் இருந்த குளங்கள் அடையாளம் காணப்பட்டு, நீர்நிலைகள் சீரமைப்பு பணி துவங்கப்பட்டது. அதன்படி, 200க்கும் மேற்பட்ட குளங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அவை மேம்படுத்தப்பட்டன. இதற்கிடையே, 2018ல் பருவ மழை பொய்த்து போனதால், 2019ல் சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. அந்தாண்டில், பொதுமக்கள் தண்ணீருக்காக தெரு தெருவாக காலி குடங்களுடன் அலைந்தனர்.

சென்னைக்கு குடிநீர் தரக்கூடிய செம்பரம்பாக்கம், செங்குன்றம் போன்ற முக்கிய ஏரிகளில், நீர் இருப்பு பெருமளவு குறைந்தது. இதனால், பெரும்பாலான ஓட்டல்கள், லாட்ஜ்கள், பெருநிறுவனங்கள் மூடப்பட்டன.தொடர்ந்து, நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில், நீர்நிலைகள் சீரமைப்பு மற்றும் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு திட்டம் போன்றவை வலுப்படுத்தப்பட்டன.

அதன்படி, 210 குளங்களை சீரமைக்க, ஸ்மார்ட் சிட்டி நிதி மற்றும் மண்டல மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்தன.இதில், 185 குளங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கரையை பலப்படுத்துதல், குளங்களுக்கு நீர் வரத்து வடிகால், போக்கு கால்வாய் சீரமைத்தல், இட வசதியுடைய குளங்களில், பொதுமக்கள் நடைபயணம் மேற்கொள்ளும் வகையில், நடைபாதைகள் அமைத்து, பூச்செடிகள் மற்றும் மரங்கள் நடப்பட்டுள்ளன.தற்போது வரை 135 குளங்கள், 66 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளன. இதில், அம்பத்துார் மண்டலத்தில், ஒரகடம் தாமரைக் குளம், பட்டரவாக்கம் பெரிய குளம், மேனாம்பேடு தாங்கல் குளம் ஆகியவை, பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு திறக்கப்பட இருந்தன.இதற்கிடையே, கடந்த மாதம் பெய்த மழையால், மூன்று குளங்களும் சேதமடைந்து, குளங்களில் தேங்கிய நீர் வெளியேறி வீணாகி உள்ளது.அண்ணா நகர் மண்டலத்தில் வலையாங்குளம் உள்ளது. இந்த குளத்திற்கு, மண்ணடி தெரு, மண்ணடி ஒத்தவாடை தெரு, திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட தெருக்களில் மழை நீர் வடிகால் இணைக்கப்பட்டுள்ளது. இக்குளம் நிரம்பியுள்ள நிலையில், போக்கு கல்வாய் இல்லாததால் குளத்தில் உள்ள நடைபாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

மேலும், குப்பையுடன், சுகாதார சீர்கேடாக குளம் காட்சி அளிக்கிறது.சீரமைக்கப்பட்ட பெரும்பாலான குளங்கள் உரிய பராமரிப்பு இல்லாமலும், உறுதி தன்மை இல்லாமலும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சி மழை நீர் வடிகால் துறை சார்பில், 210 குளங்கள் சீரமைக்க எடுக்கப்பட்டன. இதற்காக, ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதி, மண்டல மேம்பாட்டு நிதி போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. நவம்பரில் பெய்த கன மழையை தாக்குப்பிடிக்க முடியாமல் சில குளங்கள் சேதமடைந்துள்ளன.

சீரமைக்கப்பட்டுள்ள குளங்கள் பெரும்பாலும் நிரம்பி உள்ளன. ஆனால், சில குளங்கள் நீர் இருப்பை தாக்கு பிடிக்க முடியாமல், கரைகள் இடிந்துள்ளன. இதனால், சீரமைக்கப்பட்டுள்ள இதர குளங்களின் நிலை குறித்து, தர ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. குளங்களில் மண் பரிசோதனை, நீர்நிலைகளுக்கான தொழில்நுட்பம் போன்றவை முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா,

அனைத்து பணிகளும் பொறியாளர்களின் நேரடி கண்காணிப்பில் நடந்ததா போன்றவை குறித்து ஆராய திட்டமிடப்பட்டுள்ளது. இதில், குளங்களின் உறுதி தன்மை, உறுதி தன்மையற்ற குளங்கள் என்ற இரண்டு பட்டியல் தயாரிக்கப்படும்.உறுதிதன்மையற்ற குளங்களை சீரமைத்த ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இதற்கான விசாரணை விரைவில் துவங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ssh - mali,மாலத்தீவு
20-டிச-202107:24:30 IST Report Abuse
ssh அப்ரூவல் கொடுத்த இஞ்சினியரை பணிநீக்கம் செய்ய வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X