ஆவடி போர் ஊர்தி கண்காட்சி: நிறைவு நாளில் அலைமோதிய கூட்டம்

Added : டிச 20, 2021 | |
Advertisement
ஆவடி : ஆவடியில் நடந்த போர் ஊர்தி வாகனங்கள் கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று, மக்கள் கூட்டம் அலைமோதியது.நாட்டின் 75வது சுதந்திர தின விழா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, ஆவடியில் இன்ஜின் தொழிற்சாலை, கனரக வாகன தொழிற்சாலை, படை உடைத் தொழிற்சாலை சார்பில், மூன்று
 ஆவடி போர் ஊர்தி கண்காட்சி: நிறைவு நாளில் அலைமோதிய கூட்டம்

ஆவடி : ஆவடியில் நடந்த போர் ஊர்தி வாகனங்கள் கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று, மக்கள் கூட்டம் அலைமோதியது.நாட்டின் 75வது சுதந்திர தின விழா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக, ஆவடியில் இன்ஜின் தொழிற்சாலை, கனரக வாகன தொழிற்சாலை, படை உடைத் தொழிற்சாலை சார்பில், மூன்று இடங்களில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.ஆவடி, அஜயா விளையாட்டுத் திடலில் நடந்த போர் ஊர்தி கண்காட்சியில், பீரங்கிகள் வைக்கப்பட்டு இருந்தன.கண்காட்சியின் கடைசி நாளான நேற்று, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பீரங்கிகளை பார்வையிட பொதுமக்கள் திரண்டனர். அரை கி.மீ., துாரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து பார்வையிட்டனர்.இது குறித்து கண்காட்சியில் பணி புரிந்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கண்காட்சி நிறைவு நாளில், மற்ற நாட்களை விட கூட்டம் அதிகம் உள்ளது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X