ஆற்காடு சாலை சீரமைப்பு மக்கள் நிம்மதி பெருமூச்சு

Added : டிச 20, 2021 | |
Advertisement
வடபழநி : நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, போக்குவரத்துக்கு லாயக்கற்று படுமோசமாக இருந்த ஆற்காடு சாலை சீரமைக்கப்பட்டது.சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி பைபாஸ் இடையே 26.1 கி.மீ., துாண்கள் அமைக்கும் பணி நடக்கிறது. ரயில் வழித்தடம் மற்றும் நிலையங்கள் கட்டுமான பணிக்காக, ஆற்காடு சாலையில், வடபழநி 100 அடி சாலை -- சாலிகிராமம் இடையே,

வடபழநி : நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, போக்குவரத்துக்கு லாயக்கற்று படுமோசமாக இருந்த ஆற்காடு சாலை சீரமைக்கப்பட்டது.சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி பைபாஸ் இடையே 26.1 கி.மீ., துாண்கள் அமைக்கும் பணி நடக்கிறது.

ரயில் வழித்தடம் மற்றும் நிலையங்கள் கட்டுமான பணிக்காக, ஆற்காடு சாலையில், வடபழநி 100 அடி சாலை -- சாலிகிராமம் இடையே, பெரும்பாலான பகுதி இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. மீதமுள்ள சாலையில் போக்குவரத்து உள்ளது.ஆனால், இப்பாதை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக இருந்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் விபத்தை சந்தித்தனர். விபரீதத்தை, நம் நாளிதழ் சுட்டிக்காட்டியது. இதையடுத்து, அப்பகுதியை ஆய்வு செய்த அதிகாரிகள், சிமென்ட் கலவை வாயிலாக சாலையில் உள்ள பள்ளங்களை தற்காலிகமாக சீரமைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X