கோவளம் வடிநில பகுதியில் ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணி | Dinamalar

கோவளம் வடிநில பகுதியில் ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணி

Added : டிச 20, 2021 | |
சென்னை : சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, தென்சென்னையின் கோவளம் வடிநில பகுதியில், 150.45 கோடி ரூபாய் மதிப்பில், ஜெர்மன் நாட்டு வங்கி நிதியுதவியுடன், ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணி விரைவில் துவக்கப்பட உள்ளது.தென் சென்னையின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளான ராம் நகர், மடிப்பாக்கம், குபேரன் நகர், ராஜேஷ் நகர், பள்ளிக்கரணை, காரப்பாக்கம், சோழிங்கநல்லுார்

சென்னை : சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, தென்சென்னையின் கோவளம் வடிநில பகுதியில், 150.45 கோடி ரூபாய் மதிப்பில், ஜெர்மன் நாட்டு வங்கி நிதியுதவியுடன், ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணி விரைவில் துவக்கப்பட உள்ளது.தென் சென்னையின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளான ராம் நகர், மடிப்பாக்கம், குபேரன் நகர், ராஜேஷ் நகர், பள்ளிக்கரணை, காரப்பாக்கம், சோழிங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில், மழை காலங்களில், மழை நீர் தேங்கி வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.

இதை தவிர்க்கும் வகையில், கோவளம் வடிநில பகுதியில், 1,714 கோடி ரூபாய் மதிப்பில், ஜெர்மன் நாட்டின் கே.எப்.டபுள்யூ வங்கியின் நிதியுதவியுடன், ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் அமைக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.இப்பகுதி, எம் 1, எம் 2, எம் 3 எனும் திட்டக் கூறுகளாக பிரிக்கப்பட்டு, தொழில்நுட்ப வல்லுனர் குழு வாயிலாக வடிகால் அமைக்கும் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, கணினி மென்பொருள் வாயிலாக, மழை நீர் கடத்தும் திறனை ஆய்வு செய்து இறுதி வடிவமைப்பும் செய்யப்பட்டு உள்ளது.இது குறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அப்போது ஆலந்துார் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் அதிகமாக வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில், முதல் கட்டமாக மழை நீர் வடிகால்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த பகுதிகளில் உள்ள 139 தெருக்களில் 27.20 கி.மீ., நீளத்திற்கு புதிய மழை நீர் வடிகால்களும், 95 தெருக்களில் 12.60 கி.மீ., நீளத்திற்கு பழுதடைந்த மழைநீர் வடிகால்களை மறுசீரமைக்கும் பணிகளும் நடக்க உள்ளன.இதற்காக தயாரிக்கப்பட்ட மழை நீர் வடிகால்வாய் வடிவமைப்புகள்,ஜெர்மன் நாட்டின் கே.எப்.டபுள்யூ வங்கியின் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. மூன்று சிப்பங்களாக பிரித்து, 150.45 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தங்கள் இறுதியானவுடன், பணிகள் துவங்கப்பட உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X