திருத்தணி : வருவாய் கோட்டத்தில், இன்று முதல், இம்மாதம், 31ம் தேதி வரை, 20 சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.திருத்தணி வருவாய் கோட்டத்தில், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு ஆகிய ஒன்றியங்களில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம், முதற்கட்டமாக, இன்று முதல், இம்மாதம், 31ம் தேதி வரை நான்கு ஒன்றியத்திலும், 20 முகாம் நடத்தப்படும்.
திருத்தணி கால்நடை உதவி இயக்குனர் ச. தாமோதரன் கூறியதாவது:கால்நடைகளுக்கான சிறப்பு முகாமில், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல் மலட்டுத்தன்மை, குடற்புழு, ஆண்மை நீக்கம், சினை பரிசோதனை, தடுப்பூசி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.முகாமில், கிடாரி கன்று பேரணி நடத்தி, மூன்று கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும், சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றும் மூன்று விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE