திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் - தனி தொகுதிக்கு உட்பட்ட, இளையாங்கண்ணி கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள, 150 அடி உயர மலை மீது கார்மேல் மாதா சர்ச், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு உள்ளது. தற்போது, மலை உச்சியை சமன் செய்து, சர்ச் விரிவாக்கம் செய்யும் பணியை, நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இதற்காக, மலை மீது சாலை அமைக்கும் பணியை மூன்று மாதங்களுக்கு முன், செங்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கிரி துவக்கி வைத்தார்.

இந்நிலையில், அக்கிராமத்தில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், 1.32 லட்சம் ரூபாய் மதிப்பில் மரக்கன்றுகள் நடும் பணியை, நேற்று முன்தினம் கலெக்டர் முருகேஷ் துவங்கி வைத்தார். தொடர்ந்து, மலை மாதா சர்ச் பகுதியை ஆய்வு செய்ததில், மலையை சமன் செய்து விரிவாக்கம் செய்யும் பணி நடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனிருந்த வருவாய்த் துறை அதிகாரிகளிடம், 'மலையை ஆக்கிரமிப்பு செய்து விரிவாக்கம் செய்ய யார் அனுமதி கொடுத்தது' என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த மலை வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ளதா, வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ளதா, மலை மாதா சர்ச் உள்ள இடத்திற்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்து, உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE