கடலோர கட்டுமான விதிமீறல்; இடிக்க உத்தரவிடுவதில் சர்ச்சை

Updated : டிச 20, 2021 | Added : டிச 20, 2021 | கருத்துகள் (10)
Advertisement
சென்னை : கடலோர பகுதிகளில் விதிமீறிய கட்டடங்களை இடிக்க உத்தரவிடும் அதிகாரம் யாருக்கு என்பதில், புதிய சர்ச்சை எழுந்துள்ளது. தமிழகத்தில் 13 மாவட்டங்கள், கடலோர பகுதிகளாக உள்ளன. இதில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், புதிய கட்டுமான திட்டங்களை மேற்கொள்ள, கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிகளின் கீழ் ஒப்புதல் பெற வேண்டும்.இதற்கான விதிமுறைகள் அமலாக்கத்தை கண்காணிக்க, ஒப்புதல்


சென்னை : கடலோர பகுதிகளில் விதிமீறிய கட்டடங்களை இடிக்க உத்தரவிடும் அதிகாரம் யாருக்கு என்பதில், புதிய சர்ச்சை எழுந்துள்ளது. தமிழகத்தில் 13 மாவட்டங்கள், கடலோர பகுதிகளாக உள்ளன.latest tamil newsஇதில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், புதிய கட்டுமான திட்டங்களை மேற்கொள்ள, கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிகளின் கீழ் ஒப்புதல் பெற வேண்டும்.இதற்கான விதிமுறைகள் அமலாக்கத்தை கண்காணிக்க, ஒப்புதல் வழங்க மாநில, மாவட்ட அளவில், கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையங்கள் உள்ளன.

இதில் மாநில ஆணையம், விதிமீறல் கட்டடங்கள் விஷயத்தில் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விதிகளை மீறிய கட்டுமான திட்டங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த, சில ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது. இதன்படி அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர்.


latest tamil newsஇதே போன்று, பிற மாவட்டங்களிலும் விதிமீறல் கட்டுமான விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விதிமீறல் கட்டுமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், அவற்றை இடிக்க உத்தர விடுவதில், ஆணையத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. அதற்கான அதிகாரம் ஆணையத்திற்கு இல்லை என்பது தான் பிரச்னை.

சமீபத்தில் நடந்த ஆணைய கூட்டத்தில், யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இது குறித்து சுற்றுச்சூழல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிகளை மீறும் கட்டடங்களை இடிக்க உத்தரவிட, ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. அனுமதி இல்லாத கட்டுமானங்கள் மீது, மாவட்ட நிர்வாகம் தான் இடிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் ஐந்தாவது பிரிவில், மாவட்ட நிர்வாகங்களுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மராடு கட்டுமானங்கள், மாவட்ட நிர்வாகத்தால் இடிக்கப்பட்டன. தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் இது தெரிவிக்கப்பட்டது. எனவே, விதிமீறல் கட்டடங்களை இடிப்பது தொடர்பான நடவடிக்கைக்கு, அரசு தான் மாவட்ட நிர்வாகங்களை அறிவுறுத்தி செயல்பட வைக்க வேண்டும்.

இதனால், விதிமீறல் கட்டடங்கள் கட்டும் நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் தப்பிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது, கடலோர சூழல் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
22-டிச-202110:35:05 IST Report Abuse
Bharathi எல்லாம் மருமகன் கைங்கர்யம்தான்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
20-டிச-202114:52:42 IST Report Abuse
sankaseshan Sun TV கட்டிடமே கடல் கரையிலிருந்து சில மீட்டர் தூரத்தில் கட்டப்பட்டுள்ளது அவனுங்களுக்கெல்லாம் அனுமதி கிடிச்சிருக்கும் ஆளும்கட்சி தாதாக்கள் அல்லவா
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-டிச-202111:25:29 IST Report Abuse
Kasimani Baskaran திராவிடச்சித்து விளையாட்டு... ஏதாவது ஒரு வகையில் சம்பாதித்து விடுவார்கள்...
Rate this:
தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
20-டிச-202114:01:29 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன்Please don't repeat the same comment...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X