புதுடில்லி : எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், பார்லி.,யின் நடப்பு கூட்டத்தொடரில் மூன்றாவது வார அலுவல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் 29ல் துவங்கிய பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 23ம் தேதி வரை நடக்க உள்ளது. கடந்த கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதால் 12 ராஜ்யசபா எம்.பி.,க்கள் இந்தக் கூட்டத்தொடர் முழுதும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பார்லி.,யின் உள்ளேயும், வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருவதால், இரு சபைகளிலும் அலுவல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நடப்பு கூட்டத்தொடரில் ராஜ்யசபாவில் நடந்துள்ள அலுவல்கள் குறித்த புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி முதல் வாரத்தில் 49.70 சதவீதம், இரண்டாவது வாரத்தில் 52.50 சதவீத அலுவல்கள் நடந்தன.ஆனால் மூன்றாவது வாரத்தில் 63 சதவீத அலுவல் வீணாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE