நாமக்கல்: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை, நாமக்கல், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் டிச.,15ம் தேதி சோதனை மேற்கொண்டனர். தங்கமணிக்கு தொடர்புடைய 69 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.2.37 கோடி மற்றும் 1,130 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று (டிச.,20) மீண்டும் நாமக்கல், சேலம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கமணியின் உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 10 இடங்களிலும், சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள, தங்கமணியின் நண்பர் குழந்தைவேலுவின் மகன் மணிகண்டனின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோட்டில், தங்கமணி தொடர்புடைய ஈரோடு சாந்தங்காடு பகுதியிலுள்ள தங்கமணி உறவினர் குமார் என்பவருடைய வீடு, பள்ளிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி நெருக்கமான ஆடிட்டர் செந்தில்குமார் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE