பெண் ராணுவ அலுவலருக்கு பதில் கணவர் வாக்களிக்கலாம்; தேர்தல் சீர்திருத்த மசோதாவில் வழிவகை

Updated : டிச 20, 2021 | Added : டிச 20, 2021 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி: லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே தேர்தல் சீர்திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. பெண் ராணுவ அலுவலர் வெளியூர் சென்றால் அவருக்கு பதில் கணவர் வாக்களிக்கவும் இந்த மசோதா வழிவகுக்கிறது.இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்திருந்தது.
Parliament, ElectoralBill2021, Loksabha, பார்லிமென்ட், லோக்சபா, தேர்தல் சீர்திருத்த மசோதா, தாக்கல்

புதுடில்லி: லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே தேர்தல் சீர்திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. பெண் ராணுவ அலுவலர் வெளியூர் சென்றால் அவருக்கு பதில் கணவர் வாக்களிக்கவும் இந்த மசோதா வழிவகுக்கிறது.

இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் நான்கு வகையான தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது. அதில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்த சட்ட திருத்த மசோதா வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணோடு இணைப்பதற்கு வழிவகை செய்கிறது.


லோக்சபாவில் எதிர்கட்சிகள் அமளி | Election Reform Bill In Passed Lok Sabha

latest tamil news
மத்திய அமைச்சரவை ஒப்புதல் மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும் பெண் ராணுவ அலுவலர் வெளியூர் சென்றால் அவருக்கு பதில் கணவர் வாக்களிக்கவும் இந்த மசோதா வழிவகுக்கிறது. இந்த தேர்தல் சீர்திருத்த மசோதாவை லோக்சபாவில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், லோக்சபா மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும் இந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
20-டிச-202121:34:50 IST Report Abuse
Nagarajan D கள்ள ஒட்டு கயவர்கள் இதை கண்டிப்பாக ஏற்க மாட்டார்கள்.... ஆதார் திட்டத்தை கொண்டுவந்தவனுங்களே அந்த திட்டத்தை ஏற்க மாட்டேன் என்று சொல்லும் போது இவனுங்கள என்ன சொல்ல... ஆதார் கார்டும் வாக்காளர் அடையாள அட்டையும் சேர்ப்பதில் என்ன தவறு? சரியான ஒரு வழி தானே... அதனால் கள்ள ஒட்டி போடா முடியாது என்று தெளிவாக தெரிகிறது... அப்படி சேர்த்தால் தான் நம் நாட்டின் மொத்த மக்கள் தொகை சரியாக தெரியும்... ஒவ்வொரு கட்சி காரனும் எனக்கு 1.5 கோடி உறுப்பினர் இருக்கிறார்கள் என சொல்லி திரிவது பொய் என நிரூபணம் ஆகும்...திராவிட திருடனும் காந்தி கூட்ட திருடர்களும் நாட்டை எப்படி தரம் தாழ்ந்து வைத்துள்ளார்கள் என்பது தெளிவாக புரியும் அதனால் தான் எதிர்ப்பு
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
20-டிச-202120:45:23 IST Report Abuse
amuthan ஆக புதிய தேர்தல் சட்ட சீர்திருத்தம் மூலம் யார் வீட்டிலும் ஓட்டு எந்திரத்தை வைக்கலாம். எண்ணலாம். பாவம் மக்கள். ஓட்டு உரிமையை இழக்கிறார்கள்.
Rate this:
Cancel
Nalavirumbi -  ( Posted via: Dinamalar Android App )
20-டிச-202119:42:05 IST Report Abuse
Nalavirumbi One more Good Bill is passed in LokSabha. I hope it is a step to stop fake voting. Linking Aadhar-Election ID is a good decision.Let us hope Supreme Court accepts this change.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X