சென்னை: சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 'தவறு செய்பவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதுதான் தலைமைக்கு அழகு,' எனப் பேசினார். சசிகலாவை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக பன்னீர்செல்வம் சூசகமாக தெரிவித்ததாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை சேத்துப்பட்டில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது அவர், இயேசு பிரான் கதையை கூறி, 'பாவத்தை சுமந்தவர்களை மனம் திருத்த வந்துள்ளேன்' என இயேசு சொன்ன வார்த்தைகளை எடுத்துக்காட்டாக கூறினார். தொடர்ந்து பேசிய பன்னீர்செல்வம், 'தவறு செய்பவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதுதான் தலைமைக்கு அழகு,' எனத் தெரிவித்தார். நீண்ட காலமாக சசிகலாவை அதிமுக.,வில் சேர்க்கப்போவதாக செய்திகள் வெளிவரும் நிலையில், பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயக்குமார் விளக்கம்:
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: தவறு செய்தவர்கள் மனம் திருந்தினால் மன்னிக்கலாம் என்பது பாமரர்களுக்குதான் பொருந்தும். இது சசிகலாவுக்கு பொருந்தாது. சசிகலாவுக்கு அதிமுக.,வில் மன்னிப்பு என்பதே கிடையாது. சசிகலா இல்லாத அதிமுக நன்றாகத்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது. சசிகலாவுக்கும் அதிமுக.,க்கும் எந்த தொடர்புமே இல்லை. பன்னீர்செல்வம் சொன்ன குட்டிக்கதை சசிகலாவுக்கு பொருந்தாது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE