புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி ராகுல் லடாக் பகுதியை சட்டபிரிவு 6 சேர்க்க வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு பரிந்துரைத்துள்ளார். லடாக் யூனியன் பிரதேசத்தை மாநிலமாக்குவதால் என்ன பயன் என்று பார்ப்போம்.
பார்லிமென்டில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் லடாக் பிரச்னையை எழுப்பியதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக மத்திய பா.ஜ., அரசால் காஷ்மீர் மாநிலத்திலிருந்து லடாக் பிரிக்கப்பட்டு தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. லடாக்கின் வளர்ச்சியைக் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இதனை தனி மாநிலமாக மாற்ற லடாக்கில் ஒருசாரர் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கு லடாக் யூனியன் பிரதேசத்தை இந்திய அரசியல் சாசனத்தின் ஆறாவது சட்டப் பிரிவில் சேர்க்க வேண்டியது அவசியம்.

தற்போது பார்லி கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் தனி மாநிலமாக அங்கீகரிக்க வலியுறுத்தியுள்ளார். மேலும் லடாக்கைச் சேர்ந்த தனது சகோதர சகோதரிகளின் ஒருங்கிணைந்த குரலாகவே தான் பார்லியில் குரல் எழுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார். லடாக் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டால் எதிர்காலத்தில் அந்த மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சி அடையும் என நம்பப்படுகிறது. மேலும் வேலை வாய்ப்புகள் பெருகும் என்றும் புதிய தொழில் முனைவோர் வளர்ச்சி பெறுவர் என்றும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. தற்போது எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE