பெற்றோர் முன்னிலையில் நடந்த ஆண் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம்| Dinamalar

பெற்றோர் முன்னிலையில் நடந்த ஆண் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம்

Updated : டிச 20, 2021 | Added : டிச 20, 2021 | கருத்துகள் (14) | |
ஐதராபாத்: முதன்முறையாக, தெலுங்கானாவைச் சே்ர்ந்த ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல என உச்சநீதிமன்றம் 2018-ல் தீர்ப்பளித்து, இந்நிலையில், தெலுங்கானாவைச் சேர்ந்த ஓரின சேர்க்கை தம்பதிகள் அபெய் தாங்கே,34, சுப்ரியோ சக்ரவர்த்தி,31 இருவரும் 2012 ம் ஆண்டு ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் நட்பை வளர்த்து
 Hyderabad Gay Couple Get Married பெற்றோர் முன்னிலை,  ஆண் ஓரின சேர்க்கையாளர்கள், திருமணம்,In Front Of Family And Friends

ஐதராபாத்: முதன்முறையாக, தெலுங்கானாவைச் சே்ர்ந்த ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல என உச்சநீதிமன்றம் 2018-ல் தீர்ப்பளித்து, இந்நிலையில், தெலுங்கானாவைச் சேர்ந்த ஓரின சேர்க்கை தம்பதிகள் அபெய் தாங்கே,34, சுப்ரியோ சக்ரவர்த்தி,31 இருவரும் 2012 ம் ஆண்டு ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் நட்பை வளர்த்து கொண்டனர். கடந்த எட்டு ஆண்டுகளாக தம்பதிகளாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை( (டிச.18) ஐதராபாத் நகரில் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
இதில் இருவீட்டாரின் பெற்றோர்களும், நண்பர்களும் பங்கேற்றனர். இதன் புகைபடங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளனர். .


latest tamil news

ஓரின சேர்க்கையில் ஈடுபடுவது,இந்திய குற்றவியல் சட்டத்தின், 377வது பிரிவின் கீழ், இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமாகும் 'இந்தச் சட்டப் பிரிவு சட்டவிரோதமானது' என 2009ல் டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஓரின சேர்க்கை குற்றமல்ல. ஓரின சேர்க்கைக்கு எதிரான 377 சட்டம் ரத்து செய்யப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். 377வது சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக 5 நீதிபதிகள் அமர்வு கடந்த 2018-ல் ஒருமித்த தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வெளியானதையடுத்து இந்தியாவில் முதன் முறையாக ஆண் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X