சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

அவர்களை தண்டிக்க வழியில்லையா?

Added : டிச 20, 2021
Advertisement
அவர்களை தண்டிக்க வழியில்லையா?முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: பார்லிமென்ட் கூட்டத்தொடர் எந்தவித அமளியும் இன்றி அமைதியாக நடந்தால் தான் அதிசயம்.கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்த ராஜ்யசபா மழைக்கால கூட்டத் தொடரில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அநாகரிகமாக செயல்பட்டனர்.பொது காப்பீடு மசோதாவை மத்திய அரசு


அவர்களை தண்டிக்க வழியில்லையா?முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: பார்லிமென்ட் கூட்டத்தொடர் எந்தவித அமளியும் இன்றி அமைதியாக நடந்தால் தான் அதிசயம்.கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்த ராஜ்யசபா மழைக்கால கூட்டத் தொடரில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அநாகரிகமாக செயல்பட்டனர்.பொது காப்பீடு மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற முற்பட்ட போது, எதிர்க்கட்சியினர் அதன் நகல்களைக் கிழித்தெறிந்து, ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டனர்.இதை ராஜ்யசபா தலைவர் வெங்கய்ய நாயுடு கண்டித்து, ரகளையில் ஈடுபட்ட, எதிர்க்கட்சி உறுப்பினர் 12 பேரை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளார்.இது தவறு என, எதிர்க்கட்சிகள் பார்லிமென்ட்டை முடக்கி வருகின்றன. காங்கிரஸ் ராஜ்யசபா தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த நடவடிக்கையை
கண்டித்துள்ளார்.ரவுடிகள் போல செயல்பட்ட எம்.பி.,க்களை கண்டிக்காமல், அதற்கு வக்காலத்து வாங்கியுள்ளது வெட்கப்பட வேண்டிய விஷயம் . எம்.பி.,க்களின் சஸ்பெண்ட் உத்தரவைத் திரும்பப் பெறக்கோரி, திரும்பவும் போராட்டம் நடந்துள்ளது.சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்டால், உத்தரவை வாபஸ் பெறுவதாக, சபை தலைவர் கூறிய போதும், அதற்கு மறுப்பு தெரிவித்து, பார்லிமென்ட் வளாகத்தில் பேரணி நடத்தியுள்ளது, அந்த கும்பல்.
செய்த தப்புக்கு வருந்தாததோடு, மன்னிப்பும் கேட்க மாட்டோம் என்று அடம் பிடிக்கும் எம்.பி.,க்களுக்கு ஆதரவு தெரிவித்து, பார்லிமென்ட் நடப்பதற்கும் இடைஞ்சல் செய்யும் இவர்களைத் தண்டிக்க சட்டத்தில் வழியில்லையா?
பார்லிமென்ட்டில், வெறும் ஒரு நிமிட விவாதத்திற்கே கோடிக்கணக்கான ரூபாய் செலவாகிறது.வெங்கய்ய நாயுடு போன்ற மென்மையான தலைவர்கள் கண்ணீர் வடித்து, சபையின் மாண்பைக் காப்பாற்ற வேண்டினாலும், வேலைக்கு ஆகாது.எம்.பி.,க்கள் தங்கள் இஷ்டப்படி மைக் உடைத்து, நாற்காலி மீது ஏறி நின்று, நகல்களைக் கிழித்தெறிவராம்... அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாதாம்... என்னய்யா நியாயம்?
சரி தொலையட்டும். 'மன்னிப்பு கேளுங்கள்' என்று சொன்னால், அது கவுரவ குறைச்சலாம். இவர்களின் எம்.பி., பதவியை பறிக்க, ஒரு சட்டத்தை இயற்றுங்கள். தண்டனை கடுமையானால் தான் குற்றங்கள் குறையும்.


அய்யோ,பாவம் காந்தி!எஸ்.ஆர்.ரத்தினம், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடக்கும் போதெல்லாம், உள்ளே கலகம் செய்து, வெளியே வந்து, காந்தி சிலை முன் கோஷம் போடுவது,
எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு வாடிக்கையாகி விட்டது.இந்த குளிர்கால கூட்டத்தொடரிலும் அவர்களின் வாடிக்கையான செயல் தொடர்கிறது. அதற்கு காரணம், ராஜ்யசபா எம்.பி.,க்கள் 12 பேரை 'சஸ்பெண்ட்' செய்தது தான்.இந்த எம்.பி.,க்கள், பார்லிமென்டில் மேஜை மீது ஏறி கூச்சல் போட்டனர்; காகிதங்களை கிழித்து எறிந்தோர்; சபை நாகரிகத்தை
மீறினர்.மக்களுக்கு சேவை செய்ய அதிகாரம் பெற்ற இவர்கள், அற்ப காரணங்களை கூறி பார்லிமென்ட் மரபுகளை மீறலாமா?அநாகரிகமாக செயல்பட்டோருக்காக, மற்ற எம்.பி.,க்கள் வக்காலத்து வாங்குவது எந்த வகையில் நியாயம்? அதுவும் காந்தி சிலையின் முன்பு போராடலாமா?மஹாத்மா காந்தி, அகிம்சை போதித்தவர்; சத்தியத்தை வலியுறுத்தியவர்; பொது வாழ்க்கையில் நேர்மையையும், துாய்மையையும் கடைப்பிடித்தவர்.
அகிம்சையை, உலகம் முழுதும் போதித்தவர்; சுயநல அரசியலை வெறுத்தவர்; மக்கள் சேவையே அரசியலின் நோக்கம் என்று முழங்கியவர்!அவரின் சிலை முன் நின்று போராடுவோர், தங்கள் மனசாட்சியைத் தொட்டுப் பார்த்து கொள்ளட்டும்.ஊழல், அராஜகம்
செய்வதற்காகவே அரசியலில் உள்ளோர், 'ஆளுங்கட்சியை எதிர்க்கிறேன்' என்ற பெயரில், தேசத்தின் வளர்ச்சிக்கு விரோதமான செயல்களை செய்வோருக்கு, மஹாத்மா காந்தியின் சிலை முன் நிற்க தகுதி இருக்கிறதா?அய்யோ, பாவம் காந்தி... அவரை விட்டு விடுங்களேன்!


இவற்றில் கவனம்செலுத்துங்கள்!சீனி சேதுராமன், ஒருங்கிணைப்பாளர், நீர் நிலை புனரமைப்பு இயக்கம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொஞ்சம் மழை பெய்தாலும், சென்னை மாநகரில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, அது வடிவதற்கு பல
நாட்களாகி விடுகிறது.சில ஆண்டுகளுக்கு முன் சாலையின் அகலம், 40 அடி என்றால், 30 அடி அகலத்திற்கு மட்டும் தார் அல்லது 'கான்கிரீட்' அமைக்கப்படும். சாலையின் இரு பக்கத்திலும், தலா, 5 அடி அகலத்திற்கு மண் சாலையாக இருக்கும்.
அப்போது மழை நீர், சாலையின் இருபுறத்திலும் உள்ள மண்ணால் உறிஞ்சப்படும். அதனால், மழை ஓய்ந்த சில மணி நேரத்தில் சாலையில் இருந்த மழை நீர் வடிந்து விடும்.'சிங்கார சென்னை' திட்டத்தில், 40 அடி சாலை முழுதும் தார் அமைத்ததால், மழை நீரை உறிஞ்ச வழியில்லை.அடுத்ததாக, 'சீர்மிகு சென்னை' திட்டத்தில், சாலையின் ஒருபுறத்தில் நடைபாதையும், மறுபுறத்தில் மழை நீர் கால்வாயும் அமைத்தனர். இது, சாலையில் மழை நீர்
தேங்குவதற்கு வசதியாக இருக்கிறது.சென்னையில் தற்போது, எங்கும் சிமென்ட் தரையாக உள்ளது. மண் தரையை பார்ப்பது அபூர்வமாக போய்விட்டது.மழை நீர் கால்வாய் என்பது, ஒரு வீணான திட்டம். இதனால், பொதுமக்களுக்கு பயன் இல்லை; மாறாக அரசியல்வாதி, அதிகாரி, ஒப்பந்ததாரர்கள் தான் பயன் அடைகின்றனர்.
மழை நீர் கால்வாய் என்பது, ஒவ்வொரு பகுதியிலும் அங்கு உள்ள நீர் நிலையுடன் இணைக்கப்பட வேண்டும். சென்னையில் பெரும்பாலான பகுதியில், அவ்வாறு இணைக்கப்படவில்லை.மேலும் மழை நீர் கால்வாய், பிளாஸ்டிக் குப்பை தொட்டியாக தான் பயன்படுகிறது.அடுத்ததாக, மழை நீர் சேகரிப்பு திட்டம் உண்மையாகவே நல்ல பலன் கொடுத்தது. ஆனால், கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல அரசும், பொதுமக்களும் அலட்சியமாக இருந்ததால், அத்திட்டம் பெயரளவில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது.
குடியிருப்புக்குள் மழை நீர் புகுவதற்கு முக்கிய காரணமே, ஒவ்வொரு முறையும் சாலையின் உயரம் அதிகரிக்கப்படுவது தான்.மழை நீர் சேகரிப்பு, கால்வாய், சாலையின் உயரம் போன்றவற்றில் அரசு கவனம் செலுத்தினால், மழை காலங்களில் சென்னை தத்தளிக்காது!

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X