சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

தேவை இன்றி தனிநபர் கடன் வாங்காதீர்!

Added : டிச 20, 2021
Advertisement
நிதி ஆலோசகர், த.ராஜன்: அனைத்து தேவைகளுக்கும் உடனடியாக உதவுகிற ஒரு வகை கடன் எனில், அது தனிநபர் கடன் தான். ஆனால், இந்த கடனுக்கு வசூலிக்கப்படும் வட்டி, மிக அதிகம். அதாவது, ஆண்டுக்கு 16 --- 28 சதவீதம் வரை வட்டி இருக்கும். இந்த வட்டி விகிதங்கள், வங்கிக்கு வங்கி மற்றும் நபருக்கு நபர் மாறுபடும்.சம்பளதாரரை விட சுயதொழில் செய்பவர்களுக்கு வட்டி, 1 சதவீதம் அல்லது 2 சதவீதம் கூடுதலாக
சொல்கிறார்கள்

நிதி ஆலோசகர், த.ராஜன்: அனைத்து தேவைகளுக்கும் உடனடியாக உதவுகிற ஒரு வகை கடன் எனில், அது தனிநபர் கடன் தான். ஆனால், இந்த கடனுக்கு வசூலிக்கப்படும் வட்டி, மிக அதிகம். அதாவது, ஆண்டுக்கு 16 --- 28 சதவீதம் வரை வட்டி இருக்கும். இந்த வட்டி விகிதங்கள், வங்கிக்கு வங்கி மற்றும் நபருக்கு நபர் மாறுபடும்.சம்பளதாரரை விட சுயதொழில் செய்பவர்களுக்கு வட்டி, 1 சதவீதம் அல்லது 2 சதவீதம் கூடுதலாக இருக்கும். காரணம், அவர்கள் கடனை கட்டாமல் போக அதிக வாய்ப்புஇருப்பதே!மற்றவர்களை விட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு குறைவான வட்டியில் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க புகைப்பட அடையாளச் சான்றுக்காக ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொடுக்க வேண்டி வரும்.முகவரிக்கான ஆதாரமாக ஆதார் கார்டு, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, மின்சாரம் அல்லது தொலைபேசி ரசீது, சமையல் எரிவாயு ரசீது, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முகவரி பக்கம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.நீங்கள் பணிபுரிகிறீர்கள் எனில், உங்கள் சம்பள சீட்டு, படிவம், 16 அல்லது வருமான வரி கணக்கு தாக்கல் விபரம் மற்றும் ஆறு மாதங்களுக்கான வங்கி அறிக்கையை வழங்க வேண்டும். சுயதொழில் செய்பவர் எனில், மூன்று ஆண்டு கணக்கு அறிக்கை அல்லது வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததற்கான ஆதாரம் ஆகியவற்றை வருமானச் சான்றாக சமர்ப்பிக்க வேண்டும்.உங்களுக்கு சம்பள கணக்கு இருக்கும் வங்கியில் தனிநபர் கடன் வாங்குகிறீர்கள் எனில், மேற்கண்ட ஆவணங்கள் எதையும் கேட்பதில்லை. காரணம், உங்களை பற்றிய அனைத்து விபரமும் அவர்களிடம் ஏற்கனவே இருக்கும். கடனை வாங்கி, திருப்பிக் கட்டாமல் இருக்க முடியாது. காரணம், பான் எண் அடிப்படையில் கடன் தரப்படுவதால், உங்களின் கிரெடிட் ஸ்கோர் குறைந்து, அடுத்து வேறு கடன் எதுவும் வாங்க முடியாத நிலை உருவாகி விடும்.கிரெடிட் கார்டுக்கான வட்டி மாதத்திற்கு, 3 - 3.5 சதவீதமாக அதாவது ஆண்டுக்கு, 36 - 42 சதவீதமாக இருக்கும். இதற்கு பதில், தனிநபர் கடனை வாங்கி கிரெடிட் கார்டு அடைக்கும்பட்சத்தில், 15 - 25 சதவீத வட்டியை மிச்சப்படுத்த முடியும்.அதேநேரத்தில், தேவையில்லாமல் தனிநபர் கடன் வாங்க கூடாது. அது, உங்கள் நிதி ஆரோக்கியத்துக்கு தீங்கானது என்பதை எப்போதும் மறக்கக் கூடாது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X