'ஒமைக்ரான்' பாதிப்பை கண்டறிய புதிய கருவி: ஐ.சி.எம்.ஆர்., தகவல்

Updated : டிச 22, 2021 | Added : டிச 20, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி ;'ஒமைக்ரான்' வகை கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய நவீன தொழில்நுட்பம் வாய்ந்த கருவியை, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கி உள்ளது.கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், சில மாதங்களுக்கு முன் பல்வேறு நாடுகளும் அதிலிருந்து மீளத் துவங்கின. ஒப்பந்தம்இதற்கிடையே தென் ஆப்ரிக்காவில்
'ஒமைக்ரான்' பாதிப்பை கண்டறிய புதிய கருவி: ஐ.சி.எம்.ஆர்., தகவல்

புதுடில்லி ;'ஒமைக்ரான்' வகை கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய நவீன தொழில்நுட்பம் வாய்ந்த கருவியை, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கி உள்ளது.கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், சில மாதங்களுக்கு முன் பல்வேறு நாடுகளும் அதிலிருந்து மீளத் துவங்கின.


ஒப்பந்தம்



இதற்கிடையே தென் ஆப்ரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் மீண்டும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பை வழக்கமான ஆர்.டி.பி.சி.ஆர்., முறைக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பத்தில் கண்டறிவதற்கான ஆய்வுகளை அசாம் மாநிலம் திப்ரூகரில் உள்ள ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்டது.


முடிவில் ஒமைக்ரான் பாதிப்பை கண்டறியும் புதிய கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தயாரித்து உள்ளது.இந்த கருவியை மேம்படுத்தி வணிக ரீதியில் தொழில்நுட்ப பரிமாற்றங்களுடன் தயாரிக்க, சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக ஐ.சி.எம்.ஆர்., நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பை கண்டறியும் நவீன கருவியை நாங்கள் வடிவமைத்துள்ளோம். இதன் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி தொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ளும் சட்டப்பூர்வ உரிமை
எங்களிடம் உள்ளது.


'ஆன்லைன்'



எனவே நவீன கருவிகளை தயாரிப்பதில் ஆர்வம் உள்ள இத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம்.கருவிகளை தயாரிப்பது, சர்வதேச அளவில் சந்தைப்படுத்துவது, பயன்பாடு மற்றும் செயல்பாட்டு நடைமுறை, கருவிகளுக்கான 'ராயல்டி' உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளின் உரிமம் தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-டிச-202106:34:30 IST Report Abuse
Kasimani Baskaran அருமை. சீனா பேதியாக வழி செய்தால் இந்தியா மருந்து தயாரித்து அசத்துகிறது. சிறப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X