மோசடியாளர்களின் சொத்துக்களை விற்று ரூ.13,100 கோடி மீட்பு : லோக்சபாவில் நிர்மலா சீதாராமன் தகவல்

Updated : டிச 20, 2021 | Added : டிச 20, 2021 | கருத்துகள் (17) | |
Advertisement
புதுடில்லி :''வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா, நிரவ் மோடி மெஹுல் சோக்சி உள்ளிட்ட மோசடியாளர்களின் சொத்துக்களை விற்று, 13 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.லோக்சபாவில் இன்று (டிச.20) அவர் கூறியதாவது:வங்கிகளில் கடன் வாங்கி மோசடி
 மோசடியாளர்கள், சொத்துக்கள், விற்று, ரூ.13,100 கோடி, மீட்பு

புதுடில்லி :''வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா, நிரவ் மோடி மெஹுல் சோக்சி உள்ளிட்ட மோசடியாளர்களின் சொத்துக்களை விற்று, 13 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
லோக்சபாவில் இன்று (டிச.20) அவர் கூறியதாவது:வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்தவர்களிடமிருந்து பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


latest tamil news



மத்தியில்நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின், கடந்த ஏழு ஆண்டுகளில் 5.49 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகையை, வங்கிகள்மீட்டுள்ளன. வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சி போன்றோரின் சொத்துக்களை விற்று, 13 ஆயிரத்து 100 கோடி ரூபாயை வங்கிகள் மீட்டுள்ளன.


கடைசியாக கடந்த ஜூலை மாதம், மல்லையா உள்ளிட்டோருக்கு சொந்தமான சொத்துக்களை விற்று,792 கோடி ரூபாய் மீட்கப்பட்டது.மீட்கப்பட்ட பணம், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கே திரும்ப வழங்கப்பட்டது.கடன் வாங்கி மோசடி செய்தவர்கள் தப்ப முடியாது. அவர்களிடம்இருந்து பணத்தை மீட்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், வங்கிகள் இப்போது பாதுகாப்பாக உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amuthan - kanyakumari,இந்தியா
21-டிச-202120:48:22 IST Report Abuse
amuthan இவ்வளவு பணத்தையும் ஏழைகள் வங்கி கணக்கில் இருந்து பிடுங்கிய அனைவருக்கும் கொடுக்கலாம்.. புது கதையாக இருக்கு நாங்கள் ஏதோ நீரவ் மோடி, விஜய் மல்லையா லலித் மோடி இவர்கள் தான் நாட்டை கொள்ளை அடித்து சென்றார்கள் என்று நினைத்தால் அவர்களிடமிருந்து பிடுங்கியது வெறும் 13000 கோடி மட்டுமே. மீதி உள்ள 5,16 லட்சம் கோடி ரூபாய் யாரிடம் இருந்து பிடுங்கப்பட்டது என்று கூறினால் நன்றாக இருக்கும். அல்லது இது ஒரு கண் துடைப்பு, நாட்டு மக்களை ஏமாற்ற கதை விட்டது போல இருக்கும்
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
21-டிச-202110:33:13 IST Report Abuse
Ramesh Sargam What about other மோசடி காரர்கள்? உதாரணத்திற்கு ரெட்டி சகோதரர்கள் of Deccan Chronicle Newspaper group? Even these Reddy Brothers had cheated banks of thousands of crores. பிடித்தால் எல்லோரையும் பிடித்து அவர்கள் குறுக்கு வழியில் சம்பாதித்த, வங்கிகளை ஏமாற்றி சம்பாதித்த சொத்துக்களை மீட்டெடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. பாரபட்சமாக ஒரு சிலரை பிடிப்பது 'தர்மம்' அல்ல, சிறந்த நிர்வாக திறமையும் அல்ல.
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
21-டிச-202110:32:15 IST Report Abuse
ஜெயந்தன் வித்து ...வித்து...சேர்த்து மக்களுக்கு இம்மி அளவும் பலன் இல்லை... வரி மேல் வரி..தான் கண்ட பலன்.. டீசல் பெட்ரோல் விலையை 50 நாட்களாக ஏற்றாமல் இருப்பதே ...புயலுக்கு முன்னே அமைதி என்பது போல தான்...உ.பி தேர்தல் முடியட்டும்.. இவர்களின் உண்மை முகம் தெரியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X