மோசடியாளர்களின் சொத்துக்களை விற்று ரூ.13,100 கோடி மீட்பு : லோக்சபாவில் நிர்மலா சீதாராமன் தகவல்| Dinamalar

மோசடியாளர்களின் சொத்துக்களை விற்று ரூ.13,100 கோடி மீட்பு : லோக்சபாவில் நிர்மலா சீதாராமன் தகவல்

Updated : டிச 20, 2021 | Added : டிச 20, 2021 | கருத்துகள் (17) | |
புதுடில்லி :''வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா, நிரவ் மோடி மெஹுல் சோக்சி உள்ளிட்ட மோசடியாளர்களின் சொத்துக்களை விற்று, 13 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.லோக்சபாவில் இன்று (டிச.20) அவர் கூறியதாவது:வங்கிகளில் கடன் வாங்கி மோசடி
 மோசடியாளர்கள், சொத்துக்கள், விற்று, ரூ.13,100 கோடி, மீட்பு

புதுடில்லி :''வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா, நிரவ் மோடி மெஹுல் சோக்சி உள்ளிட்ட மோசடியாளர்களின் சொத்துக்களை விற்று, 13 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
லோக்சபாவில் இன்று (டிச.20) அவர் கூறியதாவது:வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்தவர்களிடமிருந்து பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


latest tamil news



மத்தியில்நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின், கடந்த ஏழு ஆண்டுகளில் 5.49 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகையை, வங்கிகள்மீட்டுள்ளன. வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சி போன்றோரின் சொத்துக்களை விற்று, 13 ஆயிரத்து 100 கோடி ரூபாயை வங்கிகள் மீட்டுள்ளன.


கடைசியாக கடந்த ஜூலை மாதம், மல்லையா உள்ளிட்டோருக்கு சொந்தமான சொத்துக்களை விற்று,792 கோடி ரூபாய் மீட்கப்பட்டது.மீட்கப்பட்ட பணம், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கே திரும்ப வழங்கப்பட்டது.கடன் வாங்கி மோசடி செய்தவர்கள் தப்ப முடியாது. அவர்களிடம்இருந்து பணத்தை மீட்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், வங்கிகள் இப்போது பாதுகாப்பாக உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X