ஆறுமுகசாமி கமிஷனுக்காக தயாராகுது புது விசாரணை அறை

Updated : டிச 22, 2021 | Added : டிச 20, 2021 | கருத்துகள் (11)
Advertisement
சென்னை :மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு, புதிய அறை அமைக்கும் பணிகளில், பொதுப்பணி துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்து உள்ளது.312 சதுர அடி சென்னை சேப்பாக்கம் கலச
 ஆறுமுகசாமி கமிஷன், புது விசாரணை அறை

சென்னை :மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு, புதிய அறை அமைக்கும் பணிகளில், பொதுப்பணி துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்து உள்ளது.

312 சதுர அடி சென்னை சேப்பாக்கம் கலச மஹாலில், இந்த கமிஷனுக்கு 2,753 சதுரடி அறை ஒதுக்கப்பட்டுஉள்ளது. நீதிபதி விசாரணை நடத்துவதற்கான சேம்பர் அறை, 312 சதுர அடியில் அமைக்கப்பட்டு இருந்தது. அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கால், விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை செய்யும் அறை, குறுகிய இடத்தில் இயங்கி வருவதற்கு அதிருப்தி தெரிவித்தது. தேவையான வசதிகளுடன், விசாலமான அறையை ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து, கலச மஹாலில் பயன்படுத்தப்படாமல் இருந்த, 1,100 சதுரடி அறையை கமிஷனுக்கு அரசு ஒதுக்கியது. இங்கு, 702 சதுரடியில் ஆறுமுகசாமி விசாரணை செய்ய, சேம்பர் அமைக்கப்பட்டு வருகிறது. புதுப்பொலிவுஇதுமட்டுமின்றி, நீதிபதி ஓய்வறை, அலுவலகம், விசாரணைக்கு வருபவர்கள் காத்திருக்கும் அறை உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இப்பணியில், பொதுப்பணித் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த வார இறுதிக்குள், ஆறுமுகசாமி கமிஷன், புதுப் பொலிவுடன் விசாரணைக்கு தயாராகி விடும்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
21-டிச-202111:42:43 IST Report Abuse
Samathuvan இந்த ரூம் போட்டு யோசிக்கிறதுன்னா இதுதானா? அப்புறம் என்ன கமிஷன்னு வேற சொல்லீட்டீங்க யாருக்கும் தெரியாமலா போகப்போவுது. தூங்குற அம்மாவை திரும்பவும் ஏன்டா எழுப்பி தொந்தரவு பண்றீங்க.
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
21-டிச-202111:28:58 IST Report Abuse
Nellai tamilan ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் சும்மா தான் இருக்கிறது பேசாமல் அங்கு மாற்றி விடலாம் இந்த கமிஷனை. இது போன்ற கமிஷன்கள் அமைக்கும் போதே அதன் பணிகாலமும் வரையறுக்கப்பட்ட வேண்டும். மக்களின் வரிப்பணம் வெள்ளையானைக்கு கரும்பாக போகிறது.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
21-டிச-202110:43:53 IST Report Abuse
S. Narayanan புது அறை கொடுத்து என்ன பிரயோஜனம் அவர் அரைத்த மாவையே திரும்ப அறைப்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X