வரிசை கட்டும் நோய்கள்; அலட்சியம் வேண்டாம்!| Dinamalar

வரிசை கட்டும் நோய்கள்; அலட்சியம் வேண்டாம்!

Updated : டிச 22, 2021 | Added : டிச 20, 2021 | கருத்துகள் (2) | |
சென்னை :'கொரோனா, டெங்கு, பன்றி காய்ச்சல் உள்ளிட்ட பல வகை பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளதால், அலட்சியப்படுத்தாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார். கொரோனா பரவல்இது தொடர்பாக கலெக்டர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஐரோப்பிய நாடுகள்
வரிசை கட்டும் நோய்கள்; அலட்சியம் வேண்டாம்!


சென்னை :'கொரோனா, டெங்கு, பன்றி காய்ச்சல் உள்ளிட்ட பல வகை பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளதால், அலட்சியப்படுத்தாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.


கொரோனா பரவல்



இது தொடர்பாக கலெக்டர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, இந்தியாவில் டில்லி உட்பட பல மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பருவமழை மற்றும் குளிர்காலம் நிறைவடையவில்லை.ஏற்கனவே உள்ள டெல்டா வகை தொற்று, புதிய வகை ஒமைக்ரான் தொற்று ஆகியவற்றுடன், டெங்கு, சிக்குன் குனியா, பன்றி காய்ச்சல் போன்ற பல்வேறு பாதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

புதிய வகை கொரோனா தொற்றை கண்டு, அதீத அச்சம் கொள்ள தேவையில்லை என்றாலும், அதை அலட்சியம் செய்வதால் ஏற்படும் விளைவுகளையும், பாதிப்புகளையும் கருத்தில் கொள்வது அவசியம்.சமூகத்தில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு மேம்பட்டிருந்தாலும், ஒமைக்ரான் வகை தொற்றை தடுக்க கூடுதல் ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் முக்கியம்.ஆனால், இதில் வருத்தத்துக்குரிய விஷயம் என்னவெனில், பொது வெளிகளில் பலர், நோய் தடுப்பு விதிகளை பின்பற்றுவது இல்லை.


வழிமுறைகள்



பொது இடங்கள், சந்தைகள், மருத்துவமனைகளிலும், கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள் கடைப்பிடிக்கப் படுவதில்லை.எனவே, ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு, மக்களிடையே விரிவான புரிதலை ஏற்படுத்த வேண்டும். அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுதல் அவசியம். வெறுமனே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு நில்லாமல், நேர்மறையான முடிவுகளை தரும் நடவடிக்கையாக இருக்க வேண்டும்.


வெளிநாடுகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் தமிழகம் வருவோரை கண்காணித்தல் என, மருத்துவ கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.தடுப்பூசி போடும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். உலக சுகாதார அமைப்பு, மத்திய அரசு, செயல் திட்ட குழு ஆகியவை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்துஉள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X