இது உங்கள் இடம்: அவர்களை தண்டிக்க வழியில்லையா?

Updated : டிச 20, 2021 | Added : டிச 20, 2021 | கருத்துகள் (39)
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: பார்லிமென்ட் கூட்டத்தொடர் எந்தவித அமளியும் இன்றி அமைதியாக நடந்தால் தான் அதிசயம். கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்த ராஜ்யசபா மழைக்கால கூட்டத் தொடரில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அநாகரிகமாகஉலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்:

பார்லிமென்ட் கூட்டத்தொடர் எந்தவித அமளியும் இன்றி அமைதியாக நடந்தால் தான் அதிசயம். கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்த ராஜ்யசபா மழைக்கால கூட்டத் தொடரில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அநாகரிகமாக செயல்பட்டனர்.latest tamil news


பொது காப்பீடு மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற முற்பட்ட போது, எதிர்க்கட்சியினர் அதன் நகல்களைக் கிழித்தெறிந்து, ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டனர். இதை ராஜ்யசபா தலைவர் வெங்கய்ய நாயுடு கண்டித்து, ரகளையில் ஈடுபட்ட, எதிர்க்கட்சி உறுப்பினர் 12 பேரை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளார்.

இது தவறு என, எதிர்க்கட்சிகள் பார்லிமென்ட்டை முடக்கி வருகின்றன. காங்கிரஸ் ராஜ்யசபா தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளார். ரவுடிகள் போல செயல்பட்ட எம்.பி.,க்களை கண்டிக்காமல், அதற்கு வக்காலத்து வாங்கியுள்ளது வெட்கப்பட வேண்டிய விஷயம் .latest tamil news


எம்.பி.,க்களின் சஸ்பெண்ட் உத்தரவைத் திரும்பப் பெறக்கோரி, திரும்பவும் போராட்டம் நடந்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்டால், உத்தரவை வாபஸ் பெறுவதாக, சபை தலைவர் கூறிய போதும், அதற்கு மறுப்பு தெரிவித்து, பார்லிமென்ட் வளாகத்தில் பேரணி நடத்தியுள்ளது,

அந்த கும்பல். செய்த தப்புக்கு வருந்தாததோடு, மன்னிப்பும் கேட்க மாட்டோம் என்று அடம் பிடிக்கும் எம்.பி.,க்களுக்கு ஆதரவு தெரிவித்து, பார்லிமென்ட் நடப்பதற்கும் இடைஞ்சல் செய்யும் இவர்களைத் தண்டிக்க சட்டத்தில் வழியில்லையா?

பார்லிமென்ட்டில், வெறும் ஒரு நிமிட விவாதத்திற்கே கோடிக்கணக்கான ரூபாய் செலவாகிறது. வெங்கய்ய நாயுடு போன்ற மென்மையான தலைவர்கள் கண்ணீர் வடித்து, சபையின் மாண்பைக் காப்பாற்ற வேண்டினாலும், வேலைக்கு ஆகாது. எம்.பி.,க்கள் தங்கள் இஷ்டப்படி மைக் உடைத்து, நாற்காலி மீது ஏறி நின்று, நகல்களைக் கிழித்தெறிவராம்... அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாதாம்... என்னய்யா நியாயம்?

சரி தொலையட்டும். 'மன்னிப்பு கேளுங்கள்' என்று சொன்னால், அது கவுரவ குறைச்சலாம். இவர்களின் எம்.பி., பதவியை பறிக்க, ஒரு சட்டத்தை இயற்றுங்கள். தண்டனை கடுமையானால் தான் குற்றங்கள் குறையும்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
22-டிச-202103:46:27 IST Report Abuse
s t rajan எதிர் கட்சிகள் அல்ல, மக்கள் நலனைக் கருதா, நாட்டின் எதிரிக் கட்சிகள். அன்னியர் நம் நாட்டில் செய்த அக்ரமத்தைவிட அதிகம் செய்யும் இவர்களை பூண்டோடு தடை செய்யுங்கள். மக்கள் அரசின் பக்கமே.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
21-டிச-202119:32:13 IST Report Abuse
Rajagopal தைவான் பாராளுமன்றத்தில் அடிதடி ரகளை சாதாரணம். இதெல்லாம் கலாச்சாரத்தில் வருவது.
Rate this:
Cancel
P.K.SELVARAJ - Chennai,இந்தியா
21-டிச-202119:20:42 IST Report Abuse
P.K.SELVARAJ Bjp எவ்வாறு முன்னர் நடந்து கொண்டது என்பது மக்களுக்கு தெரியும். 'இடிப்பார் இல்லாத எமரா மன்னன் கெடுப்பாரிலனும் கெடும்" எவ்வளவு நாள் என்று பார்போம். இப்போது தான் நாடாளுமன்றம் எவ்வாறு எதிர்கட்சிகள் இவ்வாறு நடந்து கொள்வது தெரிகிறதா? இதில் கண்டனம் வேறு. ஊழல் ஒழிப்பில் இரட்டை நாடகம் எல்லாம் மக்களுக்கு தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X