மதுரை : மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் முன் மடீட்சியா, டான்ஸ்டியா மற்றும் தொழிற்பேட்டை சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மடீட்சியா தலைவர் சம்பத் தலைமை வகித்து பேசியதாவது: விவசாயத்திற்கு அடுத்து அதிக மக்கள் சிறு, குறுந்தொழில்களில் ஈடுபட்டுஉள்ளனர். ஆறு கோடி சிறு, குறு நிறுவனங்கள் மூலம் 40 கோடி பேர் நேரிடையாக பலனடைகின்றனர். கொரோனா காலத்திற்கு பிறகு மூலப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளது.
இரும்பு, அலுமினியம்,காப்பர், பிளாஸ்டிக், நுால் ஆகியவற்றின் விலை 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் சிறு குறு நிறுவனங்கள்நஷ்டத்தில் செயல்படுகின்றன.சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது.மத்திய அரசு மூலப்பொருட்களின் விலையை குறைக்கும் பொருட்டு இறக்குமதி பொருட்களின் வரியை குறைக்க வேண்டும். உள்நாட்டில் உற்பத்தியாகும் மூலப்பொருட்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
டான்ஸ்டியா மண்டல இணை செயலாளர் ரகுநாதராஜா முன்னிலை வகித்தார். மடீட்சியா செயலாளர் லட்சுமிநாராயணன், பொருளாளர் சந்திரசேகரன், துணைத்தலைவர்கள் கோடீஸ்வரன், அசோக் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். நிர்வாகி ராமசாமி ஒருங்கிணைத்தார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement