ரேஷன் கடைகளுக்கு பேக்கிங் முறையில் பொங்கல் தொகுப்பு; பணியாளர் சங்க மாநில செயலர் வலியுறுத்தல்

Added : டிச 21, 2021 | |
Advertisement
மதுரை : ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு உணவுப்பொருட்களை தனித்தனியாக பிரித்து வழங்க ஏதுவாக பேக்கிங் முறையில் ரேஷன்கடைகளுக்கு வழங்க வேண்டும், என மதுரையில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் ஆசிரியத்தேவன் வலியுறுத்தினார்.காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் சங்கம்


மதுரை : ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு உணவுப்பொருட்களை தனித்தனியாக பிரித்து வழங்க ஏதுவாக பேக்கிங் முறையில் ரேஷன்கடைகளுக்கு வழங்க வேண்டும், என மதுரையில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் ஆசிரியத்தேவன் வலியுறுத்தினார்.காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற ஆசிரியத்தேவன் கூறியதாவது: மாநிலத்தில் 4500 துவக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 150 நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்குவது குறித்து மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம் துவக்க கூட்டுறவு சங்கங்களுக்கு தன்னிச்சையாக ஆண்டு குறியீடு நிர்ணயம் செய்து நிர்பந்திக்கிறது.இதுகுறித்த ஆய்வு கூட்டங்களில் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்கள், மண்டல இணை பதிவாளர்கள் சங்க செயலாளர்களை மனஊளைச்சலுக்குள்ளாகுகின்றனர்.

இந்த நடவடிக்கைகளை நிறுத்த கூட்டுறவு அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.காலி பணியிடங்கள் அதிகரிப்பால் பல இடங்களில் சங்க செயலாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களை கூடுதல் பொறுப்பாக கவனிப்பதால் கூடுதல் பணி சுமை ஏற்படுகிறது. சங்கங்களிலுள்ள காலி பணியிடங்களை கால தாமதமின்றி நிரப்ப வேண்டும். தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு டி.டி.எஸ்., பிடித்தம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், என்றார். நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம், ராஜா, கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X