மேலுார் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு வாங்க வியாபாரிகள் மேலுார் பகுதியில் முகாமிட்டுள்ளனர். இந்தாண்டு விளைச்சல் குறைந்து விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.
பல்லவராயம்பட்டி, எட்டிமங்களம், சருகுவலையபட்டி பகுதிகளில் விவசாயிகள் குறைந்த அளவே கரும்பு பயிரிட்டுள்ளனர். 15 கரும்புகள் கொண்டது ஒரு கட்டு. ஒரு மாட்டு வண்டிக்கு 20 கட்டுகளும், லாரிக்கு 300 கட்டுகளும், டாரஸ் லாரிக்கு 450 கட்டுகளும் ஏற்றப்படுகின்றன. ஒரு கட்டு கரும்பின் விலை ரூ.350.விவசாயி பாண்டி: கரும்பு உற்பத்தி செய்ய டீசல், உரம், ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கடந்தாண்டை விட மூன்று மடங்கு செலவு அதிகரித்துள்ளது. ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் செலவு செய்துள்ளோம். இந்தாண்டு விளைச்சல் குறைந்து விலை அதிகரித்துள்ளதால் ரூ.2.50 லட்சத்திற்கு விற்பனையாகிறது. அதனால் நஷ்டமின்றி தப்பிக்க முடியும். விவசாயிகளை ஊக்கப்படுத்த அரசு இடுபொருட்களை மானிய விலையில் கொடுக்க வேண்டும்.வியாபாரி சுந்தர்:- கரும்பின் வளர்ச்சி, நிறத்தை பொருத்து விலை நிர்ணயிக்கப்படும். இங்கு வாங்கப்படும் கரும்புகள் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. விலை அதிகம் இருந்தாலும் லாபம் கிடைக்கிறது என்றார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement