கைதாகிறார் ராஜேந்திர பாலாஜி? :பெங்களூரு விரைந்தது போலீஸ்!

Updated : டிச 21, 2021 | Added : டிச 21, 2021 | கருத்துகள் (37)
Advertisement
சென்னை :மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'சிம் கார்டு' மாற்றிய விபரம் போலீசாருக்கு தெரியவந்ததால், அதன் வாயிலாக அவர் தலைமறைவாக உள்ள இடத்தை கண்டறிய, போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.அ.தி.மு.க., ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர், விருதுநகர் மாவட்டம் சாத்துரைச் சேர்ந்த ரவீந்திரன் உள்ளிட்டோருக்கு,
கைதாகிறார் ராஜேந்திர பாலாஜி? :பெங்களூரு விரைந்தது போலீஸ்!


சென்னை :மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'சிம் கார்டு' மாற்றிய விபரம் போலீசாருக்கு தெரியவந்ததால், அதன் வாயிலாக அவர் தலைமறைவாக உள்ள இடத்தை கண்டறிய, போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி.

இவர், விருதுநகர் மாவட்டம் சாத்துரைச் சேர்ந்த ரவீந்திரன் உள்ளிட்டோருக்கு, ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக, 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.


latest tamil newsஇதுகுறித்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேந்திர பாலாஜி மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில், ராஜேந்திர பாலாஜி முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அதனால், ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். அவரை கைது செய்ய விருதுநகர் மாவட்ட போலீசார், எட்டு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். இவர்
களுக்கு சைபர் கிரைம் போலீசாரும் உதவி செய்கின்றனர். ராஜேந்திர பாலாஜி, பெங்களூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். இதற்கிடையில், 'ஸ்மார்ட் போன்' பயன்படுத்திய ராஜேந்திர பாலாஜி, பழைய, 'பட்டன் மாடல்' மொபைல் போனுக்கு, புதிய, 'சிம் கார்டு' வாங்கி பயன்
படுத்தி வருவது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனால், 'மொபைல் போன் டவர்' இருப்பிடத்தை கணித்து, ராஜேந்திர பாலாஜியை கைது செய்து விடுவோம் என்று போலீசார் நம்பிக்கை
தெரிவித்தனர்.


சகோதரி வழக்கு: நீதிபதி உத்தரவுவிசாரணை என்ற பெயரில் தங்கள் குடும்பத்தினரை போலீசார் தொந்தரவு செய்ய தடை கோரி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி தாக்கல் செய்த வழக்கை, தகுந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிட, பொறுப்பு தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி பரிந்துரைத்தார்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் லட்சுமி தாக்கல் செய்த மனு: என் சகோதரர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அவருக்கு எதிரான வழக்கு தொடர்பாக விசாரிக்க, என் இரு மகன்கள், கார் டிரைவரை போலீசார் டிச., 17ல் அழைத்துச் சென்றனர்; அவர்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தினர்.
ராஜேந்திர பாலாஜி தற்போது எங்கு உள்ளார் என்று எங்களுக்குத் தெரியாது. விசாரணை என்ற பெயரில் எங்கள் குடும்பத்தினர், டிரைவரை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு லட்சுமி குறிப்பிட்டார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அரசு தரப்பில், 'இவ்வழக்கை விசாரிக்க, இந்நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இல்லை. எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு தான் அதிகாரம் உள்ளது. இவ்
வழக்கை அங்கு மாற்ற வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது.'இவ்வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன; இதை தகுந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து, பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்படுகிறது' என்று நீதிபதி உத்தரவிட்டார்.


பழனிசாமி கடும் கண்டனம்!'ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய போலீசார் துடிப்பதும், அவரது உறவினர்களை தொந்தரவு செய்வதும் கடும் கண்டனத்திற்குரியது' என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது, பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தி, பொய் வழக்குகள் போடுவது தொடர் கதையாகி உள்ளது. அதன்படி, ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்தப் புகாருக்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லாத நிலையில், அவரை கைது செய்ய அரசு துடிக்கிறது.
தி.மு.க., அரசு தன் வசமுள்ள போலீஸ் வழியே, ராஜேந்திர பாலாஜி குடும்பத்தினர் வசந்தகுமார், ரமணா, டிரைவர் ராஜ்குமார் ஆகியோரை, சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இதை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, போலீசாரின் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தது.
ராஜேந்திர பாலாஜி, தனக்குள்ள சட்ட உரிமையின்படி, ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளார். இந்நிலையில், அவரை கைது செய்ய துடிப்பதையும், உயர் நீதிமன்ற கண்டனத்திற்கு பின்னும், அவரது உறவினர்களை தொந்தரவு செய்வதையும் கடுமையாக கண்டிக்கிறேன்.இவ்வாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.


விசாரணைக்கு வரவில்லைமுன்ஜாமின் மனுமுன் ஜாமின் கோரி, உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு நேற்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவில்லை. அதேநேரத்தில், ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய, போலீசார் மேலும் இரு தனிப்படைகளை அமைத்துள்ளனர். அதனால், தனிப்படைகளின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், உயர் நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த டிச., 17 ல் விருதுநகரில் நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்திலிருந்து ராஜேந்திர பாலாஜி அவசரம் அவசரமாக காரில் புறப்பட்டு சென்றுள்ளார். ஆங்காங்கு வெவ்வேறு கார்களில் அவர் சென்றது போலீசாருக்கு தெரியவர, ஆர்ப்பாட்டத்தில் அவருடன் பங்கேற்றவர்கள், அவருடன் பயணித்தவர்களிடம் சிவகாசி டி.எஸ்.பி., பாபுபிரசாத் விசாரணை நடத்தினார்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
26-டிச-202104:24:01 IST Report Abuse
meenakshisundaram தேர்தல் மீட்டிங்கிகளில் ஸ்டாலினை மிக கடுமையாக விமர்சித்ததாலோ இவரின் மேல் முதல் நடவடிக்கை ?
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
21-டிச-202112:16:45 IST Report Abuse
jayvee அதிமுகவின் முதல் விக்கெட் ..
Rate this:
Cancel
21-டிச-202111:25:22 IST Report Abuse
உஷா வாசுதேவன் அதிக இனிப்பு இப்படியும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி கட்சிக்கு களங்கம் சேர்த்துவிட்டதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X