எஸ்.சி. - எஸ்.டி. மாணவர் கல்வி உதவி தொகையில் ஊழல்; லஞ்ச ஒழிப்பு போலீசார் 'சம்மன்'

Updated : டிச 21, 2021 | Added : டிச 21, 2021 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை : எஸ்.சி. - எஸ்.டி. மாணவர் கல்வி உதவி தொகையில் 17.36 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் 52 கல்லுாரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.'அ.தி.மு.க. ஆட்சியில் 2014 - 18 வரையிலான ஆண்டுகளில் எஸ்.சி. - எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை வழங்குவதில் 17.36 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து சட்ட ரீதியாக விசாரணை

சென்னை : எஸ்.சி. - எஸ்.டி. மாணவர் கல்வி உதவி தொகையில் 17.36 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் 52 கல்லுாரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.



latest tamil news


'அ.தி.மு.க. ஆட்சியில் 2014 - 18 வரையிலான ஆண்டுகளில் எஸ்.சி. - எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை வழங்குவதில் 17.36 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து சட்ட ரீதியாக விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும்' என வழக்கறிஞர் அசோக்குமார் என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.

விசாரணையில் 10 வகையான ஊழல்கள் நடந்து இருப்பது தெரியவந்துள்ளது. பெரம்பலுாரில் இல்லாத ஒரு கல்லுாரிக்கு 58 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. வெளி மாநிலத்தவர்கள் மற்றும் எஸ்.சி. - எஸ்.டி. பிரிவு அல்லாதவர்களுக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களை ஆய்வு செய்த போது ஊழல் நடந்திருப்பது உண்மை என தெரியவந்துள்ளது.


latest tamil news



இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 52க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கலை அறிவியல் மருத்துவம் பொறியியல் கல்லுாரி முதல்வர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகும்படி 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
21-டிச-202116:55:50 IST Report Abuse
சீனி திருமாவளவன் பார்லிமெண்டில் தூங்கிகொண்டிருப்பதால், விரைவில் அண்ணாமலை தலைமையில் போராட்டம் துவங்கப்படும். ஜி.எஸ்.டின்னா என்ன, சர்வதேச பெட்ரோல் விலையை யார் நிர்ணயிக்கின்றனர், நீட் தேர்வுன்னா என்ன, கோட்டான்னா என்ன, சனாதன தர்மம்னா என்ன, உண்மையான இந்துன்னா யார், இந்து தர்மம் என்ன, திருவேங்கடனின் ஒரு மனித அவதாரமே பட்டியலினத்தவர்கள் போன்ற எந்த உண்மையும் தெரியாமல் அரசியல் செய்பவர்தான் திருமா.... ஹாஹாஹா....
Rate this:
Cancel
21-டிச-202114:53:50 IST Report Abuse
ஆரூர் ரங் இதுவரை திருமா வாய் திறக்கவில்லை. முன்பே கிடைத்த 😉பெட்டி காரணம்?
Rate this:
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
21-டிச-202112:44:02 IST Report Abuse
Selvaraj Thiroomal கடந்த ஐந்து வருடங்களாக மேல்படிப்புக்கான கல்வி உதவித் தொகையில் மத்திய அரசின் பங்குத்தொகை வரவில்லை, குறைந்து கொண்டே வருகிறது என அன்றைய ஆளும்கட்சி குற்றம் சுமத்தியே வந்தது. கடைசியில் வந்ததில் பெரும்தொகையை இப்படி ஆளும் மற்றும் அதிகார வர்கம் வாரி சுருட்டியதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்காமல், இது வெறும் செய்தியாகிவிடாமல் ஊடகங்களாவது பார்த்துக்கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X