பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் மதமாற்ற தடை சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரசின் டி.கே.சிவகுமார், மசோதா நகலை கிழித்தெறிந்தார்.
கர்நாடகாவில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் வகையிலான புதிய மசோதாவிற்கு நேற்று(டிச.,21) முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு 5 லட்ச ரூபாய் வரை இழப்பீடாக வழங்க வேண்டும். ஒரே நிகழ்வில் அதிகளவிலான மக்களை மதமாற்றம் செய்பவர்களுக்கு 3-10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.
மாநில அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து இந்த மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை, உள்துறை அமைச்சர் ராகா ஞானேந்திரா தாக்கல் செய்தார். இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கிய சபாநாயகர், மசோதா மீதான விவாதம் நாளை(டிச.,22) நடைபெறும் என தெரிவித்தார்.

இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரசின் டி.கே.சிவகுமார், சட்டசபையில் மசோதா நகலை கிழித்தெறிந்தார். தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE