ஐபோன் 13: தமிழகத்தில் சோதனை தயாரிப்பை தொடங்கியது ஆப்பிள்

Updated : டிச 21, 2021 | Added : டிச 21, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: ஆப்பிள் நிறுவனம் சென்னை பாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் 13-ன் சோதனை தயாரிப்பைத் தொடங்கியுள்ளது. பிப்ரவரிக்குள் உள்நாட்டு சந்தை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கான வணிக தயாரிப்பை தொடங்கும் என தொழில்துறையினர் தெரிவித்தனர்.ஆப்பிளின் ஐபோன் 13 சீரிஸில் உள்ள மூன்று போன்களில் ஐபோன் 13 இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடலாக உள்ளது. ஆப்பிள் ஏற்கனவே ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12
ஐபோன்13, தமிழகம், சோதனை, தயாரிப்பு,  ஆப்பிள்

சென்னை: ஆப்பிள் நிறுவனம் சென்னை பாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் 13-ன் சோதனை தயாரிப்பைத் தொடங்கியுள்ளது. பிப்ரவரிக்குள் உள்நாட்டு சந்தை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கான வணிக தயாரிப்பை தொடங்கும் என தொழில்துறையினர் தெரிவித்தனர்.

ஆப்பிளின் ஐபோன் 13 சீரிஸில் உள்ள மூன்று போன்களில் ஐபோன் 13 இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடலாக உள்ளது. ஆப்பிள் ஏற்கனவே ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 மாடல்களை பாக்ஸ்கான் ஆலையில் தயாரிக்கிறது. ஐபோன் சிறப்பு பதிப்பை பெங்களூருவில் உள்ள விஸ்ட்ரான் ஆலையில் தயாரித்து வருகிறது. அதில் 70% இந்தியாவில் விற்பனையாகிறது. 20 முதல் 30% உலக சந்தையில் விற்கப்படுகிறது.

தற்போது உலகளவில் செமிகண்டக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இருப்பினும் ஆப்பிள் நிறுவனம் சிப்புகள் சப்ளையை உறுதிப்படுத்தியது. அது இந்தியாவில் உற்பத்தியை விரிவாக்க உதவியுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வீட்டிலிருந்தே வேலை போன்ற காரணங்களால் ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனை கடந்த 2 ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது.


latest tamil news



2020-ல் 30 லட்சம் யூனிட்களாக இருந்த ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனை, நடப்பாண்டில் 40 லட்சம் ஆக இருக்குமென எதிர்பார்க்கிறார்கள். ஆப்பிள் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபமும் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு 2020-ல் ரூ.1,226 கோடியாக உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-டிச-202106:50:51 IST Report Abuse
அப்புசாமி ஆப்பிளும், ஆரஞ்சும் ஏன் மோடி மாடல் குஜராத், உ.பி மாநிலங்களுக்கு போக மாட்டேங்குறாங்க? தமிழண்டா.....
Rate this:
Cancel
21-டிச-202120:24:15 IST Report Abuse
ஆரூர் ரங் கெட்டுப் போன உணவை உண்டு நூற்றுக்கணக்கான இளம் பெண் ஊழியர்கள் வாந்தி. அதில் சிலர் இறந்ததாகக் கூட செய்தி பரவியது🤔. ஸ்ரீபெரும்புதூர் நிறுவனம் என்ன சொல்கிறது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X